This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
Affiliations
This person is not affiliated with any business or Blue Board record at ProZ.com.
English to Tamil: Athivaradhar Vaibhavam-A religious event or social media phenomenon? General field: Other Detailed field: Religion
Source text - English Athivaradhar Vaibhavam-A religious event or social media phenomenon?
V. Balakrishnan IPS, DIG (Trichy Range)
The recently concluded ‘Athivaradhar Vaibavam’ can easily be attributed to social media frenzy.
It was a phenomenon triggered by a set of complex factors which attracted over ten million
devotees from far and near. The temple town of Kanchipuram struggled to cope up but true to
its multi-faceted dimension it did albeit a loss of few lives- unfortunately.
The euphoria started on a low key. However the surge in the next few days was unprecedented
and kept on rising. Pictures and videos flooded the social media which in turn generated a
Tsunami of human waves towards Kanchipuram.
Meme creators were kept busy for over a month and half and who went to the extent of
comparing the emergence of ‘Lord Athivaradhar’ to the climax of the film ‘Dasavatharam’
where a statue of Vishnu was shown washed ashore due to tsunami waves.
Even Vaishnavite scholars and pontiffs were surprised by the enormous crowd which converged
in the erstwhile capital of the Pallava Kingdom and differed on whether the ‘Vaibavam’ should
be an event of religious significance or social importance.
In my view, it definitely deserves serious research to understand this phenomenon from various
perspectives-sociological, psychological, economical, and administrative among others.
The moot question is what propelled people to go crazy about the ‘Athivaradhar vaibhavam’?
It attracted people from around the globe. The city’s economy boomed over the seven week
period. Even local two wheeler owners made a kill by charging a ‘small amount of fifty rupees’
dropping people at the worship centre from various parts of the city as traffic was regulated.
I was an eye-witness to what was unfolding for ten days towards the end of the ‘once in a life
time event’. The event can easily be related to the Kumbh Mela which occurs once in twelve
years. But the scale of human surge at Kanchipuram was much higher on pro-rata basis
compared to the Kumbh Mela.
I tend to compare the ‘vaibhavam’ with the ‘Jallikattu protest’ at the Marina Beach where I was
in the forefront maintaining Law and Order as Deputy Commissioner of Mylapore. Both the
events have similarities particularly in crowd pulling thorough social media. Another event in
my memory is the ‘Melmaruvathur event’ when people thronged to that small town as news
spread like wild fire that milk was oozing from a Neem tree.
All these events have one thing in common- they spread through word of mouth-fact or fiction.
In a digital era where social media being the quintessential source of dissemination of news the
Kanchipuram event will no doubt be quoted by researches in future.
Live coverage on Facebook, daily updates on YouTube, millions of Pictures on Instagram,
Sharing, forwarding and discussing on WhatsApp without even bothering to look into the
veracity on various platforms added attraction to the event. Even individuals who were not
deeply religious used this event to promote themselves.
I used qualitative methodology to study this phenomenon through a semi-structured interview method
with an objective to understand the forces responsible including social media for such an
unprecedented response to an idol- which according to few Vaishnavites was kept under water as part
of the body was damaged and was not considered suitable for worship.
Added to social media revolution was the sense of insecurity among individuals about their survival over
the next forty years, when the idol would be taken out of water next for public viewing. I could also see
the intense media competition in the coverage.
Most respondents in my interview said their friends and relatives have already ‘had darshan’ and ‘they
were under pressure’ to do so. Senior citizens felt it was the last opportunity and would not even mind
if they lose their lives during the course of darshan. Youngsters to whom I spoke echoed similar
sentiments with anxiety, fear and work pressure reflecting in their spirited but not so confidence voice.
The top line in the Social media- ‘once in forty years’ seems to have been the deciding factor in
attracting millions of people to have a look at the idol made out of fig tree wood. I could also see a
relation between the life style and the inquisitiveness of the people to have a glimpse of the
‘Athivaradar’.
Even the ‘lord’ was not spared of the ‘selfie’ craze. Similar trend was noticed during the ‘Jallikattu
Protest’. Everybody wanted to be part of the event. People don’t want to feel left out among friends,
peers, family, and work place. None wanted to be part of the ‘’Have-not-seen’’ though tens of
thousands went back disappointed without having ‘darshan’.
Many, to whom I spoke, told me they were happy and comfortable in having ‘darshan’ on Social media
as it suited people in various time zones and witnessing the event at leisure, where the visibility was
clear and gave various dimensions.
Clearly, the social media is here to stay and technological advancement can’t be stopped.
Unbiased, I would say the arrangements by the civil and police officials contributed in millions having
‘darshan’ at a ‘once in forty years event’. As in all events, we too had lessons to learn from this event
which I am sure would be a blue print for such mega events in future.
Advancement in technology like smart phones made ‘Athivaradar Vaibavam’ a global phenomenon.
Emotions were running high over the forty eight days- a clear case of frenzy around an event. Be it
cultural or religious no doubt the event was an occasion to learn and understand the psychology of
mass-mobilisation and the plus and minus of playing with human emotions.
Alas, the fear of uncertainty about life and future has played a crucial role in the whole event.
Translation - Tamil அத்திவரதர் வைபவம்- ஒரு சமூக ஊடக நிகழ்வு?
வெ. பாலகிருஷ்ணன் டி ஐ ஜி ( திருச்சி சரகம்)
அண்மையில் நிறைவடைந்த `அத்திவரதர் வைபவம்` சமூக ஊடகப் பரபரப்பின்
வெளிப்பாடே என்று கூற முடியும்.
உள்ளூர் முதல் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒரு கோடிக்கும் அதிகமானவர்
தரிசம் செய்த இந்த வைபவம் பல்வகையான சிக்கலான காரணிகளால்
தூண்டப்பட்டது. ஆலய நகரமான காஞ்சிபுரம் இதைத் தாக்குபிடிக்க ஆரம்பத்தில்
திணறியது, ஆனால் அதன் பன்முகத்தன்மைக்கு ஏற்ப அந்நகரம் இந்த
வைபவத்தை சிறப்பாக நடத்தி பெருமை கொண்டது.
இந்தப் பரபரப்பு ஆரம்பத்தில் மந்தமாகவே இருந்தது. ஆனால் அடுத்த சில
தினங்களில் எதிர்ப்பார்ப்புகளை மீறி `தரிசனம்` செய்ய வந்தோரின் எண்ணிகை
காட்டுத் தீ போல அதிகரித்தது. படங்கள், கானொளிகள் சமூக ஊடத்தில்
வெள்ளமாய் வலம் வந்தன. காஞ்சி மாநகர் மனித அலைகளால் உருவான
சுனாமியை எதிர்கொண்டது.
கேலிச் சித்திரங்கள் மற்றும் நையாண்டிப் படங்களை வரைவோர் ஒரு
மாதத்துக்கும் மேலான காலப்பகுதியில் மிகவும் மும்முரமாக இருந்தனர். சிலர்
`அத்திவரதர்` குளத்திலிருந்து வெளிவந்ததை `தசாவதாரம்`திரைப்படத்தின் சுனாமி
அலைகளால் விஷ்னு சிலை ஒன்று கரையொதுங்கும் காட்சியுடன் ஒப்பிட்டனர்.
வைஷ்ணவ அறிஞர்களும் மடாதிபதிகளும் கூட பல்லவ சாம்ராஜ்ஜியத்தின்
முன்னாள் தலைநகரில் குவிந்த மக்கட் கூட்டத்தைக் கண்டு ஆச்சரியம்
அடைந்தனர். இந்த `வைபவம்` சிறப்பு வாய்ந்த மத நிகழ்வா அல்லது
அதிமுக்கியம் வாய்ந்த சமூக நிகழ்வா என்பதில் மாறுபட்டனர்.
எனது பார்வையில், இந்த நிகழ்வை சமூக, உளவியல், பொருளாதார மற்றும்
நிர்வாக ரீதியாக உட்பட பல அம்சங்களைப் புரிந்துகொள்ள தீவிர ஆய்வு
உறுதியாகத் தேவை.
இதில் அடிப்படைக் கேள்வி `அத்திவரதர் வைபவம்` குறித்து மக்கள் இந்த
அளவுக்கு பரபரப்படைய ஊக்குவித்தது எது? என்பதே!
உலகெங்கிலிருந்து `எம்பெருமாளைக்` காண மக்கள் வந்தனர். காஞ்சி நகரின்
பொருளாதாரம் `வரதர் எழுந்தருளிய` ஏழு வாரக் காலப்பகுதியில் ஏற்றம் கண்டது.
நகரத்திலுள்ளோர் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இத்திருவிழாவுடன்
ஈடுபட்டு அறிந்தோர் அறியாதோர் என வந்தோர் அனைவருக்கும் அடைக்கலம்
அளித்து தமது பொருளாதாரத்தையும் சிறிது மேம்படுத்திக் கொண்டனர்.
`வாழ்க்கையில் ஒரே முறை` என்று வர்ணிக்கப்பட்ட இச்சம்பவத்தின் நிறைவுப்
பகுதியில் பத்து நாட்கள் அங்கு நடைபெற்றதை பாதுகாப்புப் பணியில் இருந்த
போது நேரில் கண்டேன். இந்த நிகழ்வை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு
முறை இடபெறும் கும்ப மேளாவின் சுலபமாக ஒப்பிடலாம். ஆனால்
ஒப்பீட்டளவில் காஞ்சி நகரில் குவிந்த மனிதக் கூட்டம் கும்ப மேளாவைக்
காட்டிலும் அதிகம்.
இந்த `வைபவத்தை` நான் `ஜல்லிக்கட்டு போராட்டத்துடன்` ஒப்பிட விழைகிறேன்.
சென்னை மரீனா கடற்கரையில் அந்தப் போராட்டம் நடைபெற்ற போது,
மைலாப்பூர் பகுதியின் துணை ஆணையராக இருந்த நான், சட்டம் ஒழுங்கை
நிலைநிறுத்துவதில் முன்னின்று செயல்பட்டேன். இந்த இரு சம்பவங்களுக்கும்
இடையே இருந்த ஒரு ஒற்றுமை சமூக ஊடகங்கள் மூலம் ஆட்களை
கவர்ந்திழுத்தல் ஆகும். எனது நினைவில் நிற்கும் மற்றொறு சம்பவம்
`மேமருத்துவர் நிகழ்வாகும்`. வேப்ப மரத்திலிருந்து பால் வழிகிறது எனும் தகவல்
காட்டுத் தீயாகப் பரவ ஏராளமானோர் அந்தச் சிறு நகரில் குவிந்தனர்.
இவை அனைத்திலும் இருந்த ஒரு ஒற்றுமை-அவை உண்மையோ இல்லையோ
அவை வேகமாப் பரவி பரபரப்பை ஏற்படுத்துவதே. டிஜிடல் உலகில் செய்திக்கான
முக்கியத் தளமாக விளங்குபவை சமூக ஊடகங்கள். அவ்வகையில் காஞ்சியில்
நிறைவடைந்த வைபவம் எதிர்காலத்தில் ஆய்வாளர்களால் மேற்கோள்
காட்டப்படும் என்பதில் ஐயமில்லை.
ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு, அன்றாடம் யூடியூபில் கானொளிகள்,
இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான புகைப்படங்கள், மெய்யா பொய்யா
என்பதைக் கூட ஆராய நேரமின்றியோ சிந்தனையின்றியோ வாட்ஸப்பில்
உலவும் செய்தியும் அதைத் தொடரும் விவாதங்களும் போன்றவை `அத்திவரதர்
வைபவத்துக்கு` கூடுதல் ஆதரவைப் பெற்றது. ஆழமான மதநம்பிக்கை
இல்லாதவர்கள் கூட இந்நிகழ்வை வைத்து தம்மை முன்னிறுத்துக் கொண்டனர்.
ஒரு திருவுருவச் சிலையை இதுவரை இல்லாத வகையில் அன்பர்கள் வந்து
தரிசித்த இந்த நிகழ்வு மாபெரும் வெற்றியடைய சமூக ஊடகங்கள் உட்பட என்ன
காரணிகள் காரணமாக இருந்தன என்பதை ஆராய பகுதியளவில் தரவுசார்
முறையில் கேள்வி பதில் அடிப்படையில் நான் மேற்கொண்டேன். அதேவேளை
சில வைஷ்ணவர்கள் அந்தத் திருவுருவச் சிலையின் ஒரு பகுதி
சேதமடைந்திருப்பதால் அது வழிபாட்டுக்கு உகந்தது அல்ல என்பதாலேயே நீருக்கு
அடியில் அது வைக்கப்பட்டிருந்தது என்றும் கூறுகின்றனர்.
சமூக ஊடகப் புரட்சிக்கு அப்பாற்பட்டு தனிநபர்களிடம் நாற்பது ஆண்டுகளுக்கு
பிறகு அந்தத் திருவுருவச் சிலை மீண்டும் நீரிலிருந்து வெளியே தரிசனத்துக்காகக்
கொண்டுவரப்படும் போது நாம் வாழ்வோமோ எனும் அச்சமும் பாதுகாப்பற்ற
உணர்வும் காணப்பட்டது.
ஊடகங்களிடையே இருந்த அதீத போட்டியையும் என்னால் காண முடிந்தது.
எனது கேள்விகளுக்கு பதிலளித்த பெரும்பாலானோர், தமது நன்பர்களும்
உறவினர்களும் `ஏற்கனவே தரிசனம் செய்துவிட்டனர்` என்பதால் அவ்வாறு
செய்ய `தாங்களும் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாக` தெரிவித்தனர். மூத்த
குடிமக்களோ இதுவே தமக்கான கடைசி வாய்ப்பும் என்றும் தரிசனத்துக்குச்
செல்லும் போது உயிரிழந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை என்று
தெரிவித்தனர். என்னிடம் பேசிய இளைஞர்களும் இதுவே கடைசி வாய்ப்பு எனும்
கருத்தை பிரதிபலித்தனர். அவர்களிடையே ஒரு பதற்றம், ஏக்கம், அச்சம் மற்றும்
வேலைப் பளு ஆகியவை வெளிப்பட்டன. அவர்களின் குரலில் பக்தி தெரிந்தாலும்
நம்பிக்கை குறைவாக இருந்தது.
`நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை` என்ற தலைப்பே சமூக ஊடங்களை
ஆக்கிரமித்திருந்தன. அதுவே லட்சக் கணக்கான மக்களை கவர்ந்திழுக்க முக்கியக்
காரணியாக அமைந்தது. மக்களின் வாழ்க்கை முறைக்கும் `அத்திவரதரை`
காண்பதற்கும் ஒரு தொடர்பு இருப்பதையும் என்னால் காண முடிந்தது.
`செல்ஃபி` காலாச்சாரத்தில் `இறைவனும்` இழுக்கப்பட்டதையும் நான் கண்டேன்.
`ஜல்லிக்கட்டு போராட்டதிலும்` `செல்ஃபிக்கு` முக்கிய இடமிருந்தது. அனைவரும்
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். தமது
குடும்பத்தினர், நன்பர்கள் மற்றும் பணியிடத்தில் ``தரிசனம் காணவில்லை``
என்பதைக் கூற யாரும் விரும்பவில்லை. நீண்ட நேரம் காத்திருந்து
`எம்பெருமானை` காண மக்கள் தயங்கவில்லை.
நான் உரையாடிய பலர், சமூக ஊடகத்தில் சௌகரியமாக `தரிசனம்` செய்வதில்
மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தனர். உலகில் எங்கிருந்தாலும் தமக்கு உகந்த
நேரத்தில் ஆறுதலாக `தரிசனம்` செய்ய முடிந்தது, அப்படிக் காணும் போது
தெளிவாகவும் பல்வேறு பரிமாணங்களும் கிடைத்தன என்றும் அவர்கள்
தெரிவித்தனர்.
நம்மிடையே சமூக ஊடங்கள் அசைக்க முடியாத ஒரு இடத்தைப் பெற்றுள்ளன
என்பது நிதர்சனமான உண்மை. எதிகாலத்தில் சமூக ஊடங்களால் உந்தப்பட்ட
மக்கள் கூட்டத்தை இனிவரும் காலங்களில் எதிர்ப்பார்க்கலாம்.
சிவில் மற்றும் காவல்துறை அதிகாரிகள் செய்திருந்த ஏற்பாடுகள் லட்சக்
கணக்கானோர் `நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறும் நிகழ்வை`
கண்டனர் என்று காழ்ப்புணர்ச்சியின்றி என்னால் கூற முடியும். அனைத்து
நிகழ்வுகளைப் போலவும் எங்களுக்கும் இந்த `வைபவத்தில்` இருந்து கற்றுக்
கொள்ள நிறைய அம்சங்கள் இருந்தன. எதிர்காலத்தில் நடைபெறும் மாபெரும்
நிகழ்வுகளுக்கு திட்டமிடவும் அவற்றை சிறப்பாகச் செயல்படுத்தவும் இந்த நிகழ்வு
ஒரு முன்மாதிரியாக இருக்கும்.
ஸ்மார்ட் ஃபோன் போன்ற தொழில்நுட்பங்களும் `அத்திவரதர் வைபவத்தை` ஒரு
பன்னாட்டு நிகழ்ச்சியாக மாற்றியது. 48 நாட்கள் மக்களிடையே உணர்ச்சிகள்
மேலோங்கி இருந்தன. அந்த நிகழ்வையொட்டி எதிர்பார்ப்புடன் கலந்த ஒரு
பரபரப்பு நிலவியது.
கலாச்சார நிகழ்வாக இருக்கட்டும் அல்லது மதத் திருவிழாவாக இருக்கட்டும்,
காஞ்சி `வைபவம்` மக்களைக் கூட்டுவது மற்றும் அதைக் கட்டுப்படுத்துவது
போன்றவை குறித்து உளவியல் ரீதியாகப் புரிந்து கொள்வதற்கும், மனித
உணர்ச்சிகளுடன் விளையாடுவதிலுள்ள சாதக பாதகங்களை கற்பதற்கும் ஒரு
வாய்ப்பாக அமைந்தது.
அந்தோ, வாழ்க்கை குறித்த அச்சமும் எதிகாலம் குறித்த நிச்சயமற்ற தன்மையும்
இந்த `அத்திர்வரதர் வைபவத்தில்` முக்கிய பங்காற்றின என்பது மறுக்க முடியாக
உண்மை.
More
Less
Experience
Years of experience: 34. Registered at ProZ.com: Dec 2019.
I am an award-winning international journalist and a professional translator in various languages. I have been a Multimedia producer and presenter of News and current affairs programme and possess more than 8000 hours of live broadcast experience over two and a half
decades.
Also, I am a professional translator and fluent in more than five Asian languages apart from English.
I have trained and mentored bilingual translators and correspondents around the world and widely
acknowledged as a team player.
I also have the experience of freelancing in the Ad industry.
Keywords: Multimedia
Production
Online writing
Professional
Translation
Research reports
Knowledge Sharing
Communication
Media Research &
Analysis
Financial Management
Competitive
Intelligence
Team
Leadership
Public relations
Mentoring juniors
Social Media Journalism
Project Management
Partnership
management
Copy
Editing/Proofreading