This site uses cookies.
Some of these cookies are essential to the operation of the site,
while others help to improve your experience by providing insights into how the site is being used.
For more information, please see the ProZ.com privacy policy.
This person has a SecurePRO™ card. Because this person is not a ProZ.com Plus subscriber, to view his or her SecurePRO™ card you must be a ProZ.com Business member or Plus subscriber.
Affiliations
This person is not affiliated with any business or Blue Board record at ProZ.com.
Services
Translation, Interpreting, Editing/proofreading
Expertise
Works in:
Medical: Pharmaceuticals
Computers (general)
Education / Pedagogy
Engineering (general)
General / Conversation / Greetings / Letters
History
Insurance
Journalism
Law (general)
Linguistics
Medical (general)
Medical: Health Care
Other
Poetry & Literature
Religion
Science (general)
Social Science, Sociology, Ethics, etc.
Transport / Transportation / Shipping
Rates
English to Tamil - Rates: 0.03 - 0.04 USD per word / 15 - 15 USD per hour Tamil to English - Rates: 0.03 - 0.04 USD per word / 15 - 15 USD per hour
English to Tamil: Administration General field: Other Detailed field: Transport / Transportation / Shipping
Source text - English Sample 1
Annual Retention Review
The Annual Retention Review process is intended to "inspect what we expect" and is part of our overall commitment to "honest feedback" with our service providers. Each service provider must successfully pass this scorecard as a condition of obtaining and maintaining approved status as an Expeditors Service Provider. Our strategic goal is to continue to expand our business relationships with the highest-performing service providers in the industry.
===========================================
Sample 2
Financial Viability
Points to Review
Is the company listed with Dun & Bradstreet (D&B) or similar local credit evaluation institution?
(High Risk or Unrecorded = 1, Medium Risk =2, Low Risk = 3)
Observations/ Action Items
===========================================
Sample 3
Warehouse Exterior
Points to Review
• Customer entry and exit ways are clean, clear of miscellaneous items and organized.
• Facility bathrooms are clean and orderly. (No magazines, broken fixtures, graffiti, etc.)
• Exterior free of all trash and debris. Exterior walls clean and not in need of painting.
• Equipment in good working order and condition (lighting, fencing, etc.).
• Guard Station (if applicable) clean and orderly.
Observations/ Action Items
===========================================
Sample 4
Building Interior - Warehouse
Points to Review
• Warehouse floors: sealed to reduce dust; no black scuff marks; repairs completed as necessary.
• Interior walls painted in a light color to increase lighting and look professional.
• Warehouse, including aisles, staging and Quality Control areas, are well-lit.
• Clear, professional-looking signage throughout.
• Lines are painted or tape applied to floors to clearly indicate walkways and zones.
• Are all loaded ocean containers, trailers and trucks stored only in a “secured” yard / loading area (i.e., with CCTV, perimeter fencing and security guards)? Do Employees understand that no loaded ocean containers, trailers or trucks may be left unattended in an unsecured yard/ area for more than 30 minutes?
• Can Service Provider explain their sealing procedures when loading/stuffing ocean containers? Do seals meet or exceed the ISO/PAS 17712 standards for high security seals?
• Are there documented procedures for limiting access to seal inventories and limiting who can distribute and affix seals?
• Is seal integrity verified during pickup and/or prior to unsealing/unloading?
• Is the View-Verify-Tug-Twist method used before unsealing?
Observations/ Action Items
===========================================
Sample 6
Security Systems – Intrusion Detection/Burglar Alarm
Points to Review
• Is the monitoring company required to immediately phone law enforcement and/or Service Provider's management personnel if an alarm is detected? Is there a written SOP? Does the monitoring company have a list of Service Provider's emergency contact names and numbers?
• Does the alarm system cover all access points, as follows:
• sensors on all dock doors
• sensors on all main entrances / exits and all other exterior entrances / exits
• sensors on all office-to-warehouse doors
• sensors on all windows and other ground-level openings?
• If capable, is the alarm system programmed to have two separate zones (office & Warehouse), which can be armed independently?
• Do motion sensor alarms cover all Warehouse access points including dock doors?
• Does the alarm system have a cellular back-up or other back up monitoring device?
• Does the alarm system have a battery or generator-type power back-up system?
• Is each Employee alarm code and password unique? Are codes changed at least annually? Alarm code immediately deactivated upon termination/departure of an Employee?
• Are there records showing quarterly alarm system checks? Is there a record documenting annual professional maintenance (including battery/power back-up testing)?
Translation - Tamil Sample 1
வருடாந்திர தக்கவைப்பு மறுபரிசீலனை
வருடாந்திர தக்கவைப்பு மறுபரிசீலனை எனும் நிகழ்முறை, "எங்கள் எதிர்பார்ப்பை சோதிக்கும்" நோக்கில் உள்ளது. இது, எங்கள் சேவைதாரர்களுக்கு "நேர்மையான ஃபீட்பேக்" வழங்கவேண்டும் என்ற முழமையான தொரு பொறுப்பின் ஒரு பகுதி. ஒவ்வொரு சேவைதாரரும் இந்த மதிப்பெண் சீட்டில் தேர்ச்சி பெறவேண்டும். அதன் மூலம் தான், எக்ஸ்பெடிட்டர்ஸ் சேவைதாரர் எனும் அங்கீகரிக்கப்பட்ட அந்தஸ்தை பெறவும் பராமரிக்கவும் இயலும். இந்த தொழில்துறையில் மிகக் கூடுதலான செயலாண்மை அளிக்கும் சேவைதார்களுடன் எங்கள் வணிக உறவுகளை விரிவுபடுத்துவதே எங்கள் யுக்தி ரீதியான குறிக்கோள்.
===========================================
Sample 2
நிதி சாத்தியப்பாடு
மறுபரிசீலனைக்கான அம்சங்கள்
டன் & ப்ராட்ஸ்ட்ரீட் (D&B) அல்லது அதுபோன்ற உள்நாட்டு கடன் மதிப்பீடு நிறுவனத்தின் பட்டியலில் தங்கள் வணிக நிறுவனம் இடம்பெற்றுள்ளதா?
(உயர் அபாயம் அல்லது பதிவு செய்யப்படாதது = 1, மிதமான அபாயம் = 2, குறைந்த அபாயம் = 3)
கவனித்தவை/நடவடிக்கை
===========================================
Sample 3
வேர்-ஹவுஸ் (கிடங்கு) வெளிப்பக்கம்
மறுபரிசீலனைக்கான அம்சங்கள்
வாடிக்கையாளர் நுழைவு மற்றும் வெளியேற்ற வழிகள் சுத்தமாகவும், பல்வேறு பொருட்கள் தடத்தில் இன்றியும், சீரமைப்புடனும் இருத்தல்.
பணிமனை கழிவறைகள் சுத்தமாகவும் பாங்காகவும் இருத்தல் (பத்திரிக்கைகள், உடைந்த அரைகள், இணைப்புகள், சுவர் ஓவியம் போன்றவை இருக்கக்கூடாது)
வெளிப்பக்கத்தில் குப்பை கூளங்கள் எதுவும் இருக்கக்கூடாது. வெளிப்பக்கச் சுவர் சுத்தமாகவும், பெயின்ட் அடிக்கும் தேவை இல்லாத நிலையிலும் இருக்கவேண்டும்.
உபகரணம் நல்ல இயக்கநிலையில் இருத்தல் (விளக்கு வெளிச்சம், பாதுகாப்பு வேலி போன்றவை).
காவலர் அறை (இருப்பின்) சுத்தமாகவும் பாங்காகவும் இருத்தல்.
கவனித்தவை/நடவடிக்கை
===========================================
Sample 4
கட்டிடத்தின் உட்பகுதி - வேர்-ஹவுஸ்
மறுபரிசீலனைக்கான அம்சங்கள்
• வேர்-ஹவுஸ் தரைகள்: தூசியடைவதை குறைப்பதற்கு சீல் செய்யவேண்டும்.; கருப்பு உரசல் அச்சுக்கள் கூடாது; அவசியம் கருதி பழுதுபார்த்தலை நிறைவுசெய்தல்.
• உட்புறச் சுவர்களுக்கு இளகிய நிறத்தில் பெயின்ட் அடித்தல். இதன் மூலம் வெளிச்சம் மற்றும் உத்யோகப்பூர்வ தோற்றத்தை மேம்படுத்துதல்.
• வேர்-ஹவுஸ் - சந்துகள் உட்பட - ஸ்டேஜிங், தரக் கட்டுப்பாடு பகுதிகள் ஆகியவற்றில் பிரகாசமாக வெளிச்சம் பராமரித்தல்.
• எல்லா இடங்களிலும் தெளிவான, உத்யோகத் தோற்றம் கொண்ட பெயர்பலகைகள் அமைத்தல்.
• நடைபாதைகள் மற்றும் மண்டலங்களை தெளிவாகச் சுட்டுவதற்கு கோடுகளுக்கு பெயின்ட் அடித்தல் அல்லது தரைகளில் டேப் ஒட்டுதல்.
கவனிப்பு விஷயங்கள்/நடவடிக்கைகள்
===========================================
Sample 5
போக்குவரத்து நிலையில் பாதுகாப்பு - கன்டெய்னர்/ட்ரெய்லர் பாதுகாப்பு & சீல்கள்
மறுபரிசீலனைக்கான அம்சங்கள்
• சரக்கு ஏற்றப்பட்ட கடல்வழி கன்டெய்னர்கள், ட்ரெய்லர்கள், ட்ரக்குகள் யாவும் "பாதுகாப்பான" முற்றம்/ சரக்கேற்றப் பகுதியில் தான் சேமிக்கப்படுகின்றனவா (அதாவது - CCTV, சுற்றுப்புற வேலி மற்றும் காவலர்கள் உடன்)? பாதுகாப்பு இல்லாத ஒரு முற்றம்/பகுதியில் கடல்வழி கன்டெய்னர்கள், ட்ரெய்லர்கள், ட்ரக்குகள் எதையும் 30 நிமிடங்களுக்கு மேல் கவனிப்பின்றி விடக்கூடாது என்பதை பணியாளர்கள் விளங்கியுள்ளார்களா?
• கடல்வழி கன்டெய்னர்களில் சரக்கு ஏற்றும்/நிரப்பும்பொழுது தாங்கள் கடைப்பிடிக்கும் சீலிங் செய்முறைகளை சேவைதாரரால் விளக்க இயலுமா? பயன்படுத்தப்படும் சீல்கள், ISO/PAS 17712 உயர் பாதுகாப்பு சீல்களின் தரங்களுக்கு ஏற்ப உள்ளனவா, அல்லது அதை மிகைத்து உள்ளனவா?
• சீல் சேமிப்புப் பட்டியல்களின் நுழைவுரிமைக்கும், எவர்கள் சீல்களை விநியோகித்து பொருத்தலாம் என்பதற்கும் வரம்பு விதிக்க ஆவண செய்முறைகள் உள்ளனவா?
• பிக்-அப் சமயத்தில் மற்றும்/அல்லது சீல் உடைப்பதற்கு/சரக்கு இறக்குவதற்கு முன்பு சீல் பாதுகாப்பு சரிபார்க்கப்படுகிறதா?
• சீல் உடைப்பதற்கு முன் வியூ-வெரிஃபை-டக்-டுவிஸ்டு (கண்டு-சரிபார்த்து-முனைப்பாக இழுத்து-திருகும்) முறை பயன்படுத்தப்படுகிறதா?
கவனித்தவை/நடவடிக்கை
===========================================
Sample 6
பாதுகாப்பு அமைப்புகள் - உட்புகுதலை கண்டறிதல் / திருட்டு-அறிவிப்பு மணி
மறுபரிசீலனைக்கான அம்சங்கள்
• திருட்டு-அறிவிப்பு மணி அடித்தால், கண்காணிப்பு நிறுவனத்தார் உடனடியாக சட்ட அமுலாக்கப் பிரிவினரை மற்றும்/அல்லது சேவைதாரர் நிர்வாகப் பணியாளர்களை தொலைபேசியில் அழைக்கவேண்டுமா? ஓர் எழுத்துப்பூர்வமான ஷிளிறி உள்ளதா? சேவைதாரரின் அவசர தொடர்புப் பெயர்கள் மற்றும் எண்களின் பட்டியல், கண்காணிப்பு நிறுவனத்தாரிடம் உள்ளதா?
• திருட்டு-அறிவிப்பு மணி அமைப்பு, பின்வரும் எல்லா நுழைவு இடங்களையும் உள்ளடக்கியுள்ளதா:
• அனைத்து டாக் டோர்களிலும் உள்ள சென்சர்கள்
• அனைத்து பிரதான நுழைவாயில்கள் / வெளியேற்ற வாயில்களிலும் மற்றும் வெளிப்புற நுழைவாயில்கள் / வெளியேற்ற வாயில்களிலும் உள்ள சென்சர்கள்
• அலுவலகத்தில் இருந்து வேர்-ஹவுஸுக்குச் செல்லும் கதவுகள் அனைத்திலும் உள்ள சென்சர்கள்
• அனைத்து ஜன்னல்கள் மற்றும் பிற தரை-மட்ட திறப்பு இடங்களில் உள்ள சென்சர்கள்?
• திறன் பெற்றிருந்தால், இரண்டு தனித்தனி மண்டலங்களை கொண்டிருக்கும் (அலுவலகம் & வேர்-ஹவுஸ்) விதத்தில் - இரண்டுக்கும் தனித்தனி ஆயுதப் பாதுகாப்பு அளிக்க ஏதுவாக - அறிவிப்பு மணி அமைப்பின் நிரல் அமைந்துள்ளதா?
• மோஷன் சென்சர் அறிவிப்பு மணிகள், டாக் டோர்கள் உள்ளிட்ட அனைத்து வேர்-ஹவுஸ் நுழைவு இடங்களையும் உள்ளடக்குகிறதா?
• அறிவிப்பு மணி அமைப்புக்கு, செல்லுலர் பேக்-அப் அல்லது பிற பேக்-அப் கண்காணிப்பு சாதனம் உள்ளதா?
• அறிவிப்பு மணி அமைப்புக்கு, பேட்டரி அல்லது ஜெனரேட்டர்-வகை பவர் பேக்-அப் ஏற்பாடு உள்ளதா?
• ஒவ்வொரு 'எம்ப்ளாயி அலாரம் கோடு' மற்றும் கடவுச்சொல் பிரத்யேகமானதா? குறைந்தபட்சம் வருடம் ஒருமுறையாவது கோடுகள் (இலக்கன்கள்) மாற்றப்படுகின்றனவா? ஓர் பணியாளரின் பணிநீக்கம்/பிரிவு ஏற்பட்டதும் உடனடியாக அலாரம் கோடு செயலிழக்கச் செய்யப்படுகிறதா?
• காலாண்டு தோறும் அறிவிப்பு மணி சோதிப்புகள் நிலவுவதை காட்டும் ஆவணங்கள் உள்ளனவா? வருடாந்திர உத்யோகப்பூர்வ பராமரிப்பு (பேட்டரி/ பவர் பேக்-அப் சோதிப்பு உட்பட) குறித்து பதிவுசெய்யும் ஆவணம் உள்ளதா?
English to Tamil: E-learning (Automobile) General field: Tech/Engineering Detailed field: Automotive / Cars & Trucks
Source text - English Sample 1
Engine Diagnosis
Engine diagnostics is a typical multi-sensor fusion problem. It involves the use of multi-sensor
information such as vibration, sound, pressure and temperature, to detect and identify engine
faults.
From the viewpoint of evidence theory, information obtained from each sensor can be
considered as a piece of evidence, and as such, multi-sensor based engine diagnosis can be
viewed as a problem of evidence fusion.
===========================================
Sample 2
Turbocharger
A turbocharger, or turbo, is a gas compressor that is used for forced-induction of an internal
combustion engine. A form of supercharger, the purpose of a turbocharger is to increase the
density of air entering the engine to create more power. However, a turbocharger has the
compressor powered by a turbine, driven by the engine's own exhaust gases, rather than direct
mechanical drive as with many other superchargers.
1. The purpose of a turbocharger is to increase the density of air entering the engine to
create more power.
2. The turbine converts exhaust to rotational force.
3. The compressor draws in ambient air and pumps it in to the intake manifold at
increased pressure, resulting in a greater mass of air entering the cylinders on each
intake stroke.
===========================================
Sample 3
STEPS FOR DISCONNECTING THE FUEL LINES FROM THE FUEL FILTERS
1. Disconnect the clip of the inlet fuel line using pliers.
2. Remove the inlet fuel line from the fuel filter.
3. Disconnect the clip of the outlet fuel line using pliers.
4. Remove the outlet fuel line from the fuel filter.
5. Disconnect the clip of bypass line with pliers.
6. Remove the bypass line from the fuel filter.
===========================================
Sample 4
DIFFERENCE BETWEEN WHEEL ALIGNMENT AND WHEEL BALANCING
1. Vibration at highway speeds that can be felt in the steering wheel and/or the seat.
2. If the alignment is out, it can cause excessive tire wear and steering problems.
===========================================
Sample 5
STEPS TO BE FOLLOWED BEFORE STARTING THE WHEEL BALANCING PROCESS
1. Install the tire and wheel assembly on to the wheel balancer.
2. If it is not installed securely, it will result in a personal injury.
3. Remove the debris inside the tire.
4. Use a dial indicator to measure vertical and lateral tire and wheel run-out
5. Enter wheel diameter, width and offset in the wheel balancer.
6. Lower the safety hood on the wheel balancer to spin the wheel. Wheel balancer
automatically stops spinning the wheel and shows the required weights added on to the
wheel.
7. Install the wheel weight in the proper position.
8. Lower the safety hood on the wheel balancer and activate the balancer to spin the
wheel until the display shows OK.
===========================================
Sample 6
Computerized Wheel Alignment Pre-Inspection Check
1. Ensure the vehicle has normal weight; no additional load is added.
2. Ensure shock absorbers and struts are in satisfactory condition.
3. Tires are all of the same size.
4. Check the steering wheel free play.
5. Check the ball joints for excessive wear.
6. Check front and rear Stabilizer bar and bushing.
7. Inflate the tires.
8. Inspect the tire for excessive wear, bulges, cuts and cracks.
9. Park the car in wheel alignment pit.
10. Front wheels are on the turn plates.
===========================================
Translation - Tamil Sample 1
எஞ்சின் டயக்னாஸிஸ்
எஞ்சின் டயக்னாஸிஸ் என்பது, மல்டி-சென்சர் ஃப்யூஷன் சம்பந்தப்பட்ட விஷயம். இதில், அதிர்வு, சப்தம், பிரஷர், டெம்பரெச்சர் போன்ற மல்டி-சென்சர் தகவல்களை பயன்படுத்தி, எஞ்சின் கோளாறுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன; மற்றும் இனங்காணப்படுகின்றன.
எவிடன்ஸ் (சாட்சியம்) கொள்கையின் நோக்கில், ஒவ்வொரு சென்சரில் இருந்து கிடைக்கும் தகவலும் சாட்சியமாகக் கருதப்படலாம். எனவே, மல்டி-சென்சர் அடிப்படையிலான எஞ்சின் டயக்னாஸிஸை ஒரு எவிடன்ஸ்-ஃப்யூஷன் பிரச்சனையாக நோக்கலாம்.
===========================================
Sample 2
டர்போ சார்ஜர்
டர்போ சார்ஜர் அல்லது டர்போ என்பது ஒரு கேஸ் கம்பிரஸர். இது, இன்டர்னல் கம்பஷன் எஞ்சினின் ஃபோர்ஸ்டு-இன்டக்ஷனிற்காக பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு வடிவிலான சூப்பர் சார்ஜர். டர்போ சார்ஜரின் நோக்கமாவது, எஞ்சினுக்குள் நுழையும் காற்றின் திண்மத்தை அதிகரிப்பது மூலம் கூடுதல் பவர் உண்டாக்குவது. எனினும், வேறு பல சூப்பர் சார்ஜரில் உள்ள நேரடி மெக்கானிகல் ட்ரைவ் இதில் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, எஞ்சினின் சுய எக்ஸாஸ்ட் வாயுக்களால் இயக்கப்படும் ஒரு டர்பைன் மூலம் கம்பிரஸருக்கு திறன் அளிக்கப்படுகிறது.
1. டர்போ சார்ஜரின் நோக்கமாவது, எஞ்சினுக்குள் நுழையும் காற்றின் திண்மத்தை அதிகரிப்பது மூலம் கூடுதல் பவர் உண்டாக்குவது.
2. டர்பைனின் பணி, எக்ஸாஸ்டை சுழற்சி விசையாக மாற்றுகிறது.
3. ஆம்பியன்ட் காற்றை கம்பிரஸர் உள்ளிழுத்து, அதை இன்டேக்கிற்குள் பன்மடங்காக மற்றும் அதிகரித்த பிரஷரில் பம்பு செய்கிறது. இதனால், ஒவ்வொரு இன்டேக் ஸ்ட்ரோக்கிலும் கூடுதல் திணிவு காற்று சிலின்டர்களுக்குள் நுழைகிறது.
===========================================
Sample 3
ஃப்யூயல் லைன்கள் மற்றும் ஃப்யூயல் ஃபில்டர்களுக்கு இடையிலான இணைப்பை துண்டிப்பதற்கான செயல்பாடுகள்
1. இன்லெட் ஃப்யூயல் லைனின் கிளிப்புகளை பிளையர்கள் பயன்படுத்தி துண்டிக்கவும்.
2. இன்லெட் ஃப்யூயல் லைனை ஃப்யூயல் ஃபில்டரில் இருந்து கழற்றவும்.
3. அவுட்லெட் ஃப்யூயல் லைனின் கிளிப்புகளை பிளையர்கள் பயன்படுத்தி துண்டிக்கவும்.
4. அவுட்லெட் ஃப்யூயல் லைனை ஃப்யூயல் ஃபில்டரில் இருந்து கழற்றவும்.
5. பைபாஸ் லைனின் கிளிப்புகளை பிளையர்கள் பயன்படுத்தி துண்டிக்கவும்.
6. பைபாஸ் லைனை ஃப்யூயல் ஃபில்டரில் இருந்து கழற்றவும்.
===========================================
Sample 4
வீல் அலைன்மன்ட் மற்றும் வீல் பேலன்சிங்கிற்கு இடையிலான வேறுபாடு.
1. நெடுஞ்சாலை வேகங்களில் ஏற்படும் அதிர்வை ஸ்டியரிங் வீல் மற்றும்/அல்லது சீட்டில் உணரமுடியும்.
2. அலைன்மன்ட் விலகிவிட்டால், அது மிகுதியான டயர் தேய்மானமும் ஸ்டியரிங் பிரச்சனைகளும் ஏற்படுத்தலாம்.
===========================================
Sample 5
வீல் பேலன்சிங் நிகழ்வுமுறையை துவக்கு முன் பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள்:
1. வீல் பேலன்சர் மீது டயர் அண்டு வீல் அசெம்பிளியை இன்ஸ்டால் செய்யவும்.
2. அதை இறுக்கமாக இன்ஸ்டால் செய்யாவிட்டால், சுய நபர் காயத்திற்கு வழிவகுக்கும்.
3. டயருக்குள் சேர்ந்துவிடும் சேற்றை அகற்றவும்.
4. வெர்டிகல் மற்றும் லேடரல் டயர், வீல் ரன்-அவுட் ஆகியவற்றின் அளவை எடுப்பதற்கு ஒரு டயல் இன்டிகேடர் பயன்படுத்தவும்.
5. வீல் டயாமீட்டர், அகலம், ஆஃப்செட் ஆகியவற்றின் அளவு குறித்த தகவலை வீல் பேலன்சரினுள் செலுத்தவும்.
6. வீல் சுழற்சிக்காக வீல் பேலன்சர் மீதுள்ள சேஃப்டி ஹூடை தாழ்த்தவும். வீல் பேலன்சர் தாமாகவே வீல் சுழற்சியை நிறுத்திவிட்டு, வீலில் இணைக்கப்பட்டுள்ள தேவையான வெயிட்டுகளின் அளவை காட்டுகிறது.
7. வீல் வெயிட்டை சரியான நிலையில் இன்ஸ்டால் செய்யவும்.
8. வீல் பேலன்சர் மீதுள்ள சேஃப்டி ஹூடை தாழ்த்தவும். வீல் சுழற்சிக்காக பேலன்ஸரின் இயக்கத்தை துவக்கி, திரையில் OK வரும் வரை காத்திருக்கவும்.
===========================================
Sample 6
கம்ப்யூடரைஸ்டு வீல் அலைன்மன்ட் ப்ரீ-இன்ஸ்பெக்ஷன் சோதனை
1. வாகனத்தில் இயல்பான எடையே உள்ளது; கூடுதல் பளு எதுவும் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிசெய்யவும்.
2. ஷாக் அப்சார்பர்கள் மற்றும் ஸ்ட்ரட்டுகள் திருப்திகரமான நிலைமையில் உள்ளதை உறுதிசெய்யவும்.
3. டயர்கள் அனைத்தும் ஒரே அளவில் இருத்தல் வேண்டும்.
4. ஸ்டியரிங் வீல் ஃப்ரீ ப்லேயை சோதிக்கவும்.
5. பால் ஜாயின்டுகளில் மிகுதியான தேய்மானம் உள்ளதா என சோதிக்கவும்.
6. முன்பக்க மற்றும் பின்பக்க ஸ்டெபிலைஸர் பார் மற்றும் புஷ்ஷிங்கை சோதிக்கவும்.
7. டயர்களை இன்ஃப்லேட் செய்யவும்.
8. டயர்களில் மிகுதியான தேய்மானம், உப்புதல், வெட்டுக்கள், வெடிப்புகள் ஆகியவை உள்ளனவா என சோதிக்கவும்.
9. வீல் அலைன்மன்ட் பிட்டில் காரை நிறுத்திவைக்கவும்.
10.முன்பக்க வீல்களை டர்ன் ப்லேட்டுகள் மீது அமைக்கவும்.
===========================================
English to Tamil: E-learning (AC/Refrigeration) General field: Tech/Engineering Detailed field: Mechanics / Mech Engineering
Source text - English Sample 1
Cooling system is a mechanism for keeping the objects cool by removing the excess heat from the components and to maintain at efficient temperature.
When we talk about cooling system, our first thought would be about Air Conditioning system and Refrigerator.
===========================================
Sample 2
The refrigeration cycle is a closed loop of gas which undergoes four stages.
The first stage is the compressor, which works as a pump to control the circulation of the refrigerant, and it adds pressure to the refrigerant by heating it. The compressor also draws vapor away from the evaporator to maintain a lower pressure and lower temperature.
The gas is then routed through heat dissipation coils which release heat outside the refrigerator. As it dissipates heat, the refrigerant cools and re-condenses into a liquid.
The liquid then passes through the expansion valve which causes it to expand and change phases into a gas.
It then flows through the evaporator where absorbs the heat through evaporation and produce cooling effect.
The compressor draws off the low-pressure vaporized refrigerant and recycles it.
===========================================
Sample 3
The efficiency of a refrigeration system depends mainly on its operating temperatures. The important practical issues such as the system design, size, initial and operating costs, safety, reliability, and serviceability and so on depends on the type of refrigerant selected for a given application.
In principle, any fluid can be used as a refrigerant. Air used in an air cycle refrigeration system can also be considered as a refrigerant.
===========================================
Sample 4
Now we will discuss on function of expansion valve. Within the Air conditioning system, the expansion valve is located at the end of the liquid line. The high-pressure liquid reaches the expansion valve, having come from the condenser. The valve then reduces the pressure of the refrigerant as it passes through the surface On reducing the pressure, the temperature of the refrigerant also decreases to a level below the surrounding air. This low-pressure, low-temperature liquid is then pumped in to the evaporator.
===========================================
Sample 5
Basically the compressor used in the window air conditioners is hermetically sealed type, which is portable one. The condensor is air cooled consists of copper tubes in the form of coil. It is covered with the fins to enable faster heat transfer rate from it. The capillary tubing is made up of various rounds of the copper coil and it is used as the expansion valve in the window air conditioners. Just before the capillary there is drier filter that filters the refrigerant and also removes the moisture particles, if present in the refrigerant.
The refrigerant mostly used in the window air conditioners is R22.
===========================================
Sample 6
"Working
• The liquid receiver is a storage tank which receives the liquid refrigerant from the condenser and supplies it to the evaporator.
• A gauge valve is provided for indicating the liquid level.
• In almost all Ice manufacturing plants, ammonia is used as primary refrigerant and brine as second refrigerant.
• The condenser has 'U' tubes in which ammonia vapour circulates.
• Water is sprayed over the surface of these tubes for ammonia vapour to convert into liquid.
===========================================
Sample 7
• Refrigerant gases prevent the earth’s infrared radiation from escaping from the lower atmosphere. This is called the greenhouse effect.
• Most refrigerants are made of methane and ethane molecules.
• Refrigerants are pollutants when released into the atmosphere
• Depletion of the ozone shield:
1.Can cause an increase in skin cancer
2.Can have adverse effects on crops and other plant life
• The refrigerant should be Recovered, Recycled or Reclaimed.
==========================================
Translation - Tamil Sample 1
கூலிங் சிஸ்டம் என்பது, பொருட்களை குளிர்ச்சியாக வைப்பதற்கான ஒரு இயங்குமுறை. அது, பொருளின் பாகங்களில் இருந்து கூடுதல் வெப்பத்தை நீக்கி பயன்திறனுள்ள டெம்பரேச்சரை பராமரிக்கிறது. கூலிங் சிஸ்டம் பற்றி நாம் பேசும்பொழுது நம் மனதில் உடனே தோன்றும் சாதனங்கள்: ஏர் கன்டிஷனிங் சிஸ்டம் மற்றும் ரெஃப்ரிஜரேட்டர்
===========================================
Sample 2
ரெஃப்ரிஜரேஷன் சைக்கிள் என்பது ஒரு மூடியநிலை சுழற்சி. அதில் நான்கு கட்டங்கள் உள்ளன:
முதல் கட்டத்திற்கு பெயர், கம்பிரஸ்ஸர். இது ரெஃப்ரிஜன்ட் சுழற்சிக்கு ஒரு பம்பு போல செயல்படுகிறது; மற்றும், ரெஃப்ரிஜன்டை சூடாக்குவது மூலம் அதன் பிரஷரை உயர்த்துகிறது. மேலும், கம்பிரஸ்ஸர் நிலை, எவாப்பரேட்டரில் இருந்து ஆவியை அகற்றி, குறைந்த டெம்பரேச்சர் மற்றும் பிரஷரை பராமரிக்கிறது.
பின், இந்த வாயு வெப்பம்-அகற்றும் காயில்கள் வழியாக செலுத்தப்பட்டு, வெப்பம் ரெஃப்ரிஜரேட்டரில் இருந்து வெளியேற்றப்படுகிறது. வெப்பம் அகன்ற பின், ரெஃப்ரிஜன்ட் குளிர்ச்சி அடைந்து மீண்டும் திரவ நிலைக்கு மாறிவிடுகிறது.
அடுத்து, எக்ஸ்பேன்ஷன் வால்வு வழியாக இந்த லிக்விட் செல்வதால், அது விரிவடைந்து ஃபேஸ்கள் மாறி வாயுவாக மாறிவிடுகிறது. அடுத்து, அது எவாப்பரேட்டர் வழியாக ஓடி, அங்கே எவாப்பரேஷன் மூலம் வெப்பத்தை உறிஞ்சி குளிர்நிலையை உண்டாக்குகிறது. கம்பிரஸ்ஸர் நிலை, தாழ்வு-பிரஷர் வேப்பரைஸ்டு ரெஃப்ரிஜரன்டை அகற்றி அதை மறுசுழற்சி செய்கிறது.
===========================================
Sample 3
ஓர் ரெஃப்ரிஜரேஷன் சிஸ்டத்தின் பயன்திறன் முக்கியமாக அதன் ஆப்பரேடிங் டெம்பரேச்சர்களை சார்ந்து உள்ளது. முக்கியமான நடைமுறை விஷயங்களான சிஸ்டம் வடிவிப்பு, அளவு, தொடக்க மற்றும் இயக்க செலவுகள், பாதுகாப்பு, சார்புத்தன்மை, பழுதுசெய்யவல்ல தன்மை முதலானவை ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு தெரிவுசெய்யப்படும் ரெஃப்ரிஜரன்டு வகையை பொறுத்தே உள்ளது. கோட்பாட்டளவில், எவ்வொரு ஃப்லூயிடையும் ரெஃப்ரிஜரன்டாக பயன்படுத்தலாம். ஏர் சைக்கிள் ரெஃப்ரிஜரேஷன் சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் காற்றை கூட ஒரு ரெஃப்ரிஜரன்டாக கருதலாம்.
===========================================
Sample 4
எக்ஸ்பேன்ஷன் வால்வுகள் குறித்து இப்பொழுது கலந்துரையாடுவோம். ஏர்கன்டிஷனிங் சிஸ்டத்தினுள், எக்ஸ்பேன்ஷன் வால்வு என்பது லிக்விட் லைனின் இறுதியில் எவாப்பரேட்டருக்கு முன்பு இடம்பெற்றுள்ளது. உயர் பிரஷர் லிக்விட், கன்டன்சரில் இருந்து வந்து எக்ஸ்பேன்ஷன் வால்வை அடைகிறது.அடுத்து, இந்த வால்வின் மேற்பரப்பு வழியாக ரெஃப்ரிஜரன்டு செல்லும்பொழுது, அதன் பிரஷர் குறைகிறது. பிரஷர் குறைக்கப்படும்பொழுது, ரெஃப்ரிஜரன்டின் டெம்பரேச்சரும் சுற்றியுள்ள காற்றின் வெப்ப நிலையை விட குறைவாகிவிடுகிறது. இந்த தாழ்வு- பிரஷர் தாழ்வு-டெம்பரேச்சர் திரவம் பின்னர் எவாப்பரேட்டரினுள் பம்பு செய்யப்படுகிறது.
===========================================
Sample 5
வின்டோ ஏர் கன்டிஷனர்களில் பயன்படுத்தப்படும் கம்பிரஸ்ஸர், அடிப்படையில் ஹெர்மடிகல்லி சீல்டு வகை. அது நகர்த்தவல்லது. கன்டன்சர் ஏர் கூல்டு வகையை சேர்ந்தது; மற்றும், அதில் காயில் வடிவில் காப்பர் டியூபுகள் அடங்கியுள்ளன. அதிலிருந்து வேகமாக வெப்பத்தை வெளியேற்றுவதற்கு ஃபின்களால் அது மூடப்பட்டுள்ளது. கேபில்லரி டியூபிங், பல்வேறு சுற்றுகள் உள்ள காப்பர் காயிலால் அமைந்துள்ளது; மற்றும், அது வின்டோ ஏர் கன்டிஷனர்களில் எக்ஸ்பேன்ஷன் வால்வாக பயன்படுத்தப்படுகிறது. கேபில்லரிக்கு சற்று முன்பு ட்ரையர் ஃபில்டர் உள்ளது. இது ரெஃப்ரிஜரன்டை ஃபில்டர் செய்து, ரெஃப்ரிஜரன்டைல் ஈரப்பத துகள்கள் இருந்தால் அவற்றை அகற்றுகிறது.
வின்டோ ஏர் கன்டிஷனர்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ரெஃப்ரிஜரன்டு, R22.
===========================================
Sample 6
இயக்கம்:
• லிக்விட் ரிசீவர் என்பது ஒரு சேமிப்பு டேன்க். அதுதான் கன்டன்சரில் இருந்து லிக்விட் ரெஃப்ரிஜரன்டை பெற்று, எவாப்பரேட்டருக்கு வழங்குகிறது.
• திரவ மட்டத்தை சுட்டுவதற்கு ஒரு கேஜ் வால்வு வைக்கப்பட்டுள்ளது.
• ஏறத்தாழ எல்லா ஐஸ் தயாரிப்பு ப்லான்டுகளிலும் அம்மோனியா ப்ரைமரி ரெஃப்ரிஜரன்டாகவும், ப்ரைன் செகன்டரி ரெஃப்ரிஜரன்டாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
• கன்டன்சரில் 'U' டியூபுகள் உள்ளன. அவற்றில் அம்மோனியா ஆவி சுழற்சிசெய்யப்படுகிறது.
• அம்மோனியா ஆவியை திரவமாக மாற்றுவதற்கு, இந்த டியூபுகளின் மேற்பரப்பில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது.
==========================================
Sample 7
• பூமியின் இன்ஃப்ரா-ரெட் கதிர்கள் கீழ் வாயு மண்டலத்திலிருந்து வெளியேறுவதை ரெஃப்ரிஜரன்டு வாயுக்கள் தடுக்கின்றன. இதற்கு பெயர், க்ரீன்ஹவுஸ் எஃபக்ட்.
• ரெஃப்ரிஜரன்டுகளில் பெரும்பாலானவை மீத்தேன் மற்றும் ஈத்தேன் மூலக்கூறுகளால் ஆனவை.
• ரெஃப்ரிஜரன்டுகள் அசலில் வாயு மண்டலத்தினுள் வெளிப்படுத்தப்படும் மாசுகள்.
• ஓஸோன் காப்புப் படிமம் அரிக்கப்படுவதால்,
1. சருமக் கேன்சர் அதிகரிக்கலாம்.
2. பயிர்கள் மற்றும் இதர தாவர உயிரினங்கள் மீது மோசமான விளைவுகள் ஏற்படலாம்.
• ரெஃப்ரிஜரன்டை ரீகவர், ரீசைக்கிள் மற்றும் ரீக்லெயிம் செய்தல்வேண்டும். "
==========================================
English to Tamil: E-learning (Economics) General field: Social Sciences Detailed field: Economics
Source text - English Sample 1
People have a mix of goals for development
Income is a measurable goal
The non-measurable goals are equally important as income
Respect, security and equality are more important than income for working women.
Development is about setting a goal for betterment
And finding ways to achieve that goal
Some people try to achieve development through agitations
Development is possible only through democratic processes
===========================================
Sample 2
The non-measurable developmental goals in life are equally - and sometimes even more - important than the measurable developmental goals like income.
Non-measurable developmental goals like respect, security and equality are more important than income when it comes to working women and encouraging more women to work outside their homes.
===========================================
Sample 3
Do all people have the same perception of development?
A casual labourer may want more job security
A child labourer may want education and better nourishment
An office worker may want better pay, promotion and more luxury
An industrialist may want cheaper power, lower taxes and higher profit
A girl child may want equal opportunities as her brother
===========================================
Sample 4
When the government raises the procurement prices of food grains, …
... a farmer would consider it as development as it raises his income.
However, a consumer may not agree as this would raise the prices of food grains in the markets
Similarly, when it comes to clearing forests to expand cities, …
... some people may call it development as we need more land to build homes and industries.
However, environmentalists, and tribals whose livelihood depends on forests, may not agree.
===========================================
Translation - Tamil Sample 1
மக்கள் ஒரு கலவையான முன்னேற்றக் குறிக்கோள்களை கொண்டுள்ளனர்
வருமானம் என்ற குறிக்கோளை அளவிட முடியும்
அளவிட முடியாத பிற குறிக்கோள்களும் வருமானம் அளவிற்கு முக்கியமானவை
பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மரியாதை, பாதுகாப்பு, சமத்துவம் ஆகியவை வருமானத்தை விட அதிக முக்கியத்துவம் கொண்டவை.
முன்னேற்றம் என்பது, மேலும் சிறக்க ஒரு குறிக்கோளை வகுத்துக்கொண்டு
அந்த குறிக்கோளை அடைவதற்குரிய வழிகளைத் தேடுவது
சிலர் கிளர்ச்சிகள் மூலம் முன்னேற்றம் அடைய முயற்சிக்கின்றனர்
ஜனநாய நிகழ்முறைகள் மூலமே முன்னேற்றம் சாத்தியமாகிறது.
===========================================
Sample 2
வாழ்வின் அளவிட முடியாத முன்னேற்றக் குறிக்கோள்களும் இணையான முக்கியத்துவம் கொண்டவை. அவை சில சமயங்களில், வருமானம் போன்ற அளவிடவல்ல குறிக்கோள்களை விட அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
பணிக்குச் செல்லும் பெண்கள் விஷயத்தில் - மரியாதை, பாதுகாப்பு, சமத்துவம் போன்ற அளவிட முடியாத முன்னேற்றக் குறிக்கோள்கள் வருமானத்தை விட அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. மேலும் அதிகமான பெண்களை வீட்டிற்கு வெளியே பணிபுரிய ஊக்குவிப்பதற்கும் இவை முக்கியமானவை.
===========================================
Sample 3
முன்னேற்றம் குறித்து எல்லோருக்கும் ஒரேவிதமான கண்ணோட்டம் உள்ளதா?
ஒரு சாதாரன தொழிலாளி கூடுதல் பணிப் பாதுகாப்பை விரும்பலாம்
ஒரு குழந்தைத் தொழிலாளி கல்வி மற்றும் சிறந்த போஷாக்கை விரும்பலாம்
ஓர் அலுவலர் கூடுதல் சம்பளம், பணி உயர்வு மற்றும் சிறந்த சுகவாழ்வை விரும்பலாம்.
ஒரு தொழிலதிபர் மலிவான மின்சாரம், குறைவான வரி மற்றும் உயர்வான லாபத்தை விரும்பலாம்.
ஒரு பெண் குழந்தை தன் சகோதரனுக்கு இணையான வாய்ப்புகள் பெற விரும்பலாம்
===========================================
Sample 4
உணவு தானியங்களின் கொள்முதல் விலைகளை அரசு உயர்த்தினால்...
...ஒரு விவசாயி அதை முன்னேற்றம் என்று கருதுவார். ஏனெனில், அது அவருடைய வருமானத்தை உயர்த்துகிறது.
எனினும், நுகர்வோர் இந்தக் கருத்தை ஏற்கமாட்டார்கள். ஏனெனில், இதனால் சந்தைகளில் உணவு தானிய விலைகள் அதிகரித்துவிடும்
அதேபோல், காடுகளை அழித்து நகரங்களை விரிவாக்கும் விஷயத்தில்,...
...சிலர் அதை முன்னேற்றம் என்று அழைப்பார்கள். ஏனெனில், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் கட்ட நமக்கு கூடுதல் நிலம் தேவை.
எனினும், சுற்றுச்சூழல் இயக்கவாதிகளும், காடுகளைச் சார்ந்து வாழ்வாதாரம் அமைத்துள்ள பழங்குடியினரும் இக்கருத்தை ஏற்க மறுக்கலாம்.
===========================================
English to Tamil: E-learning (Electronics) General field: Tech/Engineering Detailed field: Electronics / Elect Eng
Source text - English Sample 1
3. Testing in a simple switching circuit
A simple switching circuit, to test an NPN transistor
Connect the transistor into the circuit shown on the right which uses the transistor as a switch. The supply voltage is not critical, anything between 5 and 12V is suitable. This circuit can be quickly built on breadboard for example. Take care to include the 10k resistor in the base connection or you will destroy the transistor as you test it!
If the transistor is OK the LED should light when the switch is pressed and not light when the switch is released.
To test a PNP transistor use the same circuit but reverse the LED and the supply voltage.
Some multimeters have a 'transistor test' function which provides a known base current and measures the collector current so as to display the transistor's DC current gain hFE.
==========================================
Sample 2
RC TIME CONSTANT
The time required to charge a capacitor to 63 percent (actually 63.2 percent) of full charge or to discharge it to 37 percent (actually 36.8 percent) of its initial voltage is known as the TIME CONSTANT (TC) of the circuit. The charge and discharge curves of a capacitor are shown in figure 3-11. Note that the charge curve is like the curve in figure, and the discharge curve like the curve in figure.
RC time constant.
The value of the time constant in seconds is equal to the product of the circuit resistance in ohms and the circuit capacitance in farads. The value of one time constant is expressed mathematically as t = RC.
===========================================
Sample 3
Advantages of ICs
As compared to standard printed circuits which use discrete components, I C s have the following advantages.
I. Extremely Small Physical size: Often the size is thousands of times smaller than a discrete circuit. The various components and their interconnections are distinguishable only under a powerful microscope.
II. Very Small Weight: Since manufacturers can pack much more circuitry into an IC package, it drastically cuts down the weight of the circuit. Weight and size are of great importance in military and space applications, though in consumer applications they are always the primary consideration.
III. Reduced Cost: It is a major advantage of I Cs. The reduction in cost per unit is due to the fact that all circuit components are fabricated in or on the wafer at the same time and also because hundreds of similar wafers are produced simultaneously. Due to mass production, an IC costs as much as an individual transistor.
IV. Extremely high reliability: It is perhaps the most important advantage of an IC and is due to many factors. Most significant factor is the absence of soldered connections. Another is the need for fewer interconnections – the major cause of circuit failures. Small temperature rise due to low power consumptions of I Cs also improves their reliability. In fact, an IC logic gate has been found to be 100,000 times more reliable than a vacuum tube logic gate and 100 times more reliable than a transistor logic gate.
V. Suitability for Small – Signal operation: Since, various components of an IC are located very close to each other in or on silicon wafer their chance of stray electrical pick up is practically nil. Hence, it makes them very suitable for small signal operation.
VI. Low Power Consumption: Because of their small size, I Cs are more suitable for low power operation than bulky discrete circuits.
VII. Easy Replacement: I Cs are hardly ever repaired because in case of failure, it is more economical to replace them than to repair them.
===========================================
Sample 4
TV Troubleshooting
SAFETY
TVs and computer or video monitors are among the more dangerous of consumer electronic equipment when it comes to servicing. (Microwave ovens are probably the most hazardous due to high voltage at high power.) There are two areas which have particularly nasty electrical dangers: the non-isolated line power supply and the CRT high voltage.
Major parts of nearly all modern TVs and many computer monitors are directly connected to the AC line - there is no power transformer to provide the essential barrier for safety and to minimize the risk of equipment damage. In the majority of designs, the live parts of the TV or monitor are limited to the AC input and line filter, degauss circuit, bridge rectifier and main filter capacitor(s), low voltage (B ) regulator (if any), horizontal output transistor and primary side of the flyback (LOPT) transformer, and parts of the startup circuit and standby power supply. The flyback generates most of the other voltages used in the unit and provides an isolation barrier so that the signal circuits are not line connected and safer. Since a bridge rectifier is generally used in the power supply, both directions of the polarized plug result in dangerous conditions and an isolation transformer really should be used - to protect you, your test equipment, and the TV, from serious damage. Some TVs do not have any isolation barrier whatsoever - the entire chassis is live. These are particularly nasty.
The high voltage to the CRT, while 200 times greater than the line input, is not nearly as dangerous for several reasons. First, it is present in a very limited area of the TV or monitor - from the output of the flyback to the CRT anode via the fat HV wire and suction cup connector. If you don't need to remove the mainboard or replace the flyback or CRT, then leave it alone and it should not bite. Furthermore, while the shock from the HV can be quite painful due to the capacitance of the CRT envelope, it is not nearly as likely to be lethal since the current available from the line connected power supply is much greater.
===========================================
Translation - Tamil Sample 1
3. ஒரு எளிய சுவிட்சிங் சர்கியூட் பயன்படுத்தி சோதித்தல்
NPN ட்ரான்சிஸ்டரை சோதிக்க ஒரு எளிய சுவிட்சிங் சர்கியூட்
வலது புறம் காட்டப்பட்டுள்ள சர்கியூட்டில் ட்ரான்சிஸ்டரை இணைக்கவும் . அதில் ட்ரான்சிஸ்டர் ஒரு சுவிட்சாக பயன்படுத்தப்படுகிறது. சப்ளை வோல்டேஜ் மிகத் துல்லியமானது அன்று. அது 5 V க்கும் 12 V க்கும் இடையில் பொருத்தமான ஒன்றாக இருக்கலாம். உதாரணமாக, இதை பிரட்போர்டுவில் வேகமாக அமைத்துவிடலாம். பேஸ் இணைப்பில் உள்ள 10 KΩ ரெசிஸ்டரை சேர்ப்பதை உறுதிசெய்யவும். இல்லாவிட்டால், சோதிக்கும்பொழுது ட்ரான்சிஸ்டர் அழிந்துவிடும்!
ட்ரான்சிஸ்டர் நல்ல நிலையில் இருந்தால், சுவிட்சை அழுத்தினால் LED ஒளிரவேண்டும். சுவிட்சை விடுவித்தால், LED ஒளிரக்கூடாது..
PNP ட்ரான்சிஸ்டரை சோதிப்பதற்கும் அதே சர்கியூட்டை பயன்படுத்தவும். எனினும், LED மற்றும் சப்ளை வோல்டேஜை திசை மாற்றவும்..
சில மல்டி மீட்டர்களில் 'ட்ரான்சிஸ்டர் டெஸ்ட்' வசதி உள்ளது. இது, அறியப்பட்ட பேஸ் கரன்டை வழங்கும் மற்றும் கலெக்டர் கரன்டை அளக்கும். இதன் மூலம், ட்ரான்சிஸ்டரின் DC கரன்ட் கெயினை hFF திரையில் காட்டும்.
===========================================
Sample 2
RC டைம் கான்ஸ்டன்ட்
ஒரு கெபாசிடரை, அதன் முழு சார்ஜ் அளவில் 63 சதவீதத்திற்கு (அசலில் 63.2) சார்ஜ் செய்ய எடுக்கும் நேரம், அல்லது அதன் தொடக்க வோல்டேஜில் 37 சதவீதத்திற்கு (அசலில் 36.8) டிஸ்சார்ஜ் செய்ய எடுக்கும் நேரம் டைம் கான்ஸ்டன்ட் (TC) என அழைக்கப்படுகிறது. படம் 3-11 ல் கெபாசிடரின் சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் கர்வுகள் காட்டப்பட்டுள்ளன. சார்ஜ் கர்வும் டிஸ்சார்ஜ் கர்வும் படத்தில் உள்ள கர்வுகள் போலவே இருக்கும்
RC டைம் கான்ஸ்டன்ட்
டைம் கான்ஸ்டன்டின் மதிப்பளவு சென்ட்ஸ் கணக்கில் கூறப்படுகிறது. அது சர்கியூட் ரெசிஸ்டன்ஸ் (ஓம்ஸ் கணக்கில்) மற்றும் சர்கியூட் கெபாசிடன்ஸை (ஃபேரட்ஸ் கணக்கில்) பெருக்கினால் கிடைக்கும். கணித ரீதியாக, ஒரு டைம் கான்ஸ்டன்டின் மதிப்பளவு t=RC எனக் கூறப்படுகிறது.
===========================================
Sample 3
IC களின் சாதகங்கள்
டிஸ்கிரீட் பகுதிப்பொருட்களை பயன்படுத்தும் ஸ்டேன்டட் பிரின்டட் சர்கியூட்டுகளை ஒப்பிடுகையில், IC களுக்கு பின்வரும் சாதகங்கள் உள்ளன.
I. மிக மிக சிறிய உடல் அளவு: பெரும்பாலும் இதன் அளவு, டிஸ்கிரீட் சர்கியூட்டை விட ஆயிரக்கணக்கான மடங்கு சிறியது. இதன் பல்வேறு பகுதிப்பொருட்கள் மற்றும் அவற்றின் இடை-இணைப்புகளை ஒரு சக்திவாய்ந்த மைக்ரோஸ்கோப்பின் மூலமே இனங்காண முடியும்.
II. மிகச் சிறிய எடை: உற்பத்தியாளர்கள், ஒரு IC பேக்கேஜில் மென்மேலும் கூடுதலான சர்கியூட்ரியை வைத்து அடைக்க இயலும் என்பதால், அது சர்கியூட்டின் எடையை வெகுவாகச் சுருக்கிவிடுகிறது. எடையும் அளவும் இராணுவ மற்றும் வின்வெளிப் பயன்பாடுகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ள அதேவேளை, நுகர்வோர் பயன்பாடுகளில் அவை பிரதான கருதுபொருள்களாக விளங்குகின்றன.
III. குறைந்த செலவு: இது IC களின் ஒரு மாபெரும் சாதகம். ஒரு யூனிட்டுக்கான செலவு குறைந்ததற்குக் காரணம், அனைத்து சர்கியூட் பகுதிப்பொருட்களும் வேபரில் அல்லது அதன் மீது ஒரே சமயத்தில் வடிக்கப்படுகிறது. மற்றும், நூற்றுக்கணக்கான இத்தகு வேஃபர்கள் ஒரே சமயத்தில் உருவாக்கப்படுகிறது. மொத்த உற்பத்தியின் காரணமாக, ஒரு IC யின் செலவும் ஒரு தனி ட்ரான்சிஸ்டரின் செலவும் ஒரே அளவாக உள்ளது.
IV. அதி உயர் சார்புத்தன்மை: அநேகமாக, இதுவே IC யின் மிக முக்கியமான சாதகமாக இருக்கும். இது பல காரணிகளால் ஏற்படுகின்றன. இதில் மிக முக்கியமான காரணி, சால்டர் செய்யப்பட்ட இணைப்புகள் இல்லாமை. இன்னொன்று குறைவான இடை-இணைப்புகளே தேவைப்படுதல். இடை-இணைப்புகளே சர்கியூட் கோளாறுகளுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. IC கள் குறைவாகப் பவர் உட்கொள்வதால் விளையும் சிறிய டெம்பரேச்சர் ஏற்றமும் இவற்றின் சார்புத்தன்மையை மேம்படுத்துகிறது. உண்மையில், ஒரு IC லாஜிக் கேட், ஒரு வேக்யூம் டியூப் லாகிக் கேட்டை விட 100,000 மடங்கும்; ஒரு ட்ரான்சிஸ்டர் லாஜிக் கேட்டை விட 100 மடங்கும் அதிக சார்புத்தன்மை உடையது.
V. ஸ்மால்-சிக்னல் இயக்கத்திற்கு பொருத்தம்: ஓர் IC யின் பல்வேறு பகுதிப்பொருட்கள் சிலிகான் வேஃபரில் அல்லது அதன் மீது ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக இடம்பெற்றிருப்பதால், அவை வீண் மின்சாரத் துளிகளை பற்றிக்கொள்வதற்கான் சாத்தியம், நடைமுறையளவில், பூஜியமாக இருக்கிறது. எனவே, ஸ்மால்-சிக்னல் இயக்கத்திற்கு இவை மிகவும் பொருத்தமானவையாக விளங்குகின்றன.
VI. லோ-பவர் கன்சம்ஷன்: IC கள் அவற்றின் சிறிய அளவினால், லோ பவர் இயக்கத்திற்கு எடை மிகுந்த டிஸ்கிரீட் சர்கியூட்டுகளை விட அதிகப் பொருத்தமானவை.
VII. எளிதாக மாற்றுதல்: IC களை பழுதுபார்ப்பது என்பதே கிடையாது எனக் கூறலாம். கோளாறு நிகழ்ந்தால், அவற்றை பழுதுபார்ப்பதை விட புதிதாக மாற்றுவதற்கு செலவு குறைவு
===========================================
Sample 4
டி.வி. ட்ரபுள் ஷூடிங்
பாதுகாப்பு
சர்வீஸ் என்று வரும்பொழுது, டி.வி. களும் கம்ப்யூட்டர் அல்லது வீடியோ மானிடர்களும் தான் கூடுதல் அபாயகரமான நுகர்வோர் எலக்ட்ரானிக் உபகரணங்களைச் சேர்ந்தவை. (அநேகமாக, மைக்ரோவேவ் அடுப்புகளே மிக அபாயகரமானவை. ஏனெனில், அவற்றில் உயர் பவரில் உயர் வோல்டேஜ் உள்ளது.) குறிப்பாக, படுமோசமான எலக்ட்ரிகள் அபாயங்கள் கொண்ட இரண்டு பகுதிகள் உள்ளன: ஐசொலேடட்-அல்லாத லைன் பவர் சப்ளை மற்றும் CRT உயர் வோல்டேஜ்.
எல்லா நவீன டி.வி.களின் அநேக பாகங்களும் பல கம்ப்யூட்டர் மானிடர்களும் நேரடியாக AC லைனுடன் இணைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்கும் உபகரணம் சேதமாகும் ஆபத்தைக் குறைந்தபட்சமாக்குவதற்கும் அத்தியாவசியத் தடுப்பு அளிக்கும் எவ்வொரு பவர் ட்ரான்ஸ்ஃபார்மரும் இருப்பதில்லை. பெரும்பான்மையான வடிவுகளில், டி.வி. அல்லது மானிடரின் உயிர் பாகங்களாக விளங்குபவை: AC இன்புட் மற்றும் லைன் ஃபில்டர், டீகாஸ் சர்கியூட், பிரிட்ஜ் ரெக்டிஃபையர் மற்றும் முக்கிய ஃபில்டர் கெபாசிடர்(கள்), லோ-வோல்டேஜ் (B )
ரெகுலேட்டர்கள் (தேவைப்பட்டால்) ஹரிஸான்டல் ஔட்புட் ட்ரான்சிஸ்டர் மற்றும் ஃப்ளைபேக் (LOPT) ட்ரான்ஸ்ஃபார்மரின் ப்ரைமரி பக்கம், ஸ்டார்ட்அப் சர்கியூட்டின் பகுதிகள் மற்றும் ஸ்டேன்ட்பை பவர் சப்ளை. பெட்டியில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பிற வோல்டேஜுகளை ஃப்ளைபேக் தான் உண்டாக்குகிறது. மற்றும், இதுவே ஒரு ஐசொலேஷன் தடுப்பு அளிப்பது மூலம், சிக்னல் சர்கியூட்டுகள் லைனில் இணைக்கப்படுவதை தவிர்த்து கூடுதல் பாதுகாப்பு வழங்குகிறது. மேலும், பவர் சப்ளையில் பொதுவாக பிரிட்ஜ் ரெக்டி¬ஃபயர் உபயோகிக்கப்படுவதால், போலரைஸ்டு பிளக்கின் இரு திசைகளும் அபாயகரமான நிலைமைகளுக்கு வழிவகுக்கும். எனவே, கண்டிப்பாக ஒரு ஐசொலேஷன் ட்ரான்ஸ்ஃபார்மரை பயன்படுத்தி உங்களையும் உங்கள் சோதிப்பு உபகரணத்தையும் டி.வி.யையும் மோசமான சேதத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சில டி.வி.களில் எவ்வித ஐசொலேஷன் தடுப்பும் இருப்பதில்லை. சேஸ்ஸி (உடல்) முழுவதிலும் மின்சாரம் பரவியுள்ளது. இத்தகு வகைகள் குறிப்பாக மோசமான விளைவுகள் ஏற்படுத்தக்கூடியவை..
CRT க்கு வழங்கப்படும் உயர் வோல்டேஜ், லைன் இன்புட்டை விட 200 மடங்கு அதிகமாக இருப்பினும், மேற்கூறிய அளவுக்கு அபாயம அளிப்பதில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன: முதலில், அது டி.வி. அல்லது மானிடரின் மிகவும் குறைவான பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது - அதாவது, ஃப்ளைபேக் ஔட்புட்டிலிருந்து தடித்த பிக்ஷி கம்பி மற்றும் சக்ஷன் கனெக்டர் வாயிலாக CRT ஆனோடு வரை. நீங்கள் மெயின்போர்டை நீக்கவோ ஃபைளைபேக் அல்லது CRT யை மாற்றவோ தேவையில்லை என்றால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அது உங்களை பாதிக்காது. மேலும், HV யிலிருந்து வரும் அதிர்ச்சி, CRT என்வெலப்பின் கெபாசிடன்ஸினால் அதிக வலி தரக்கூடியதெனினும், அது உயிருக்கே ஆபத்தாக விளங்கும் சாத்தியம் மேற்கூறியதன் அளவுக்கு இருப்பதில்லை. ஏனெனில், லைன் இணைப்பில் உள்ள பவர் சப்ளையில் இருந்து வரும் கரன்ட் மிகவும் கூடுதலாக உள்ளது.
===========================================
English to Tamil: E-learning (Hospitality) General field: Other Detailed field: Cooking / Culinary
Source text - English Sample 1
We know that a restaurant is known for the food items and beverages that it serves. Now all restaurants serve almost the same kind of dishes, still one is more popular than the other one. What is it that makes their food items different and more delicious than the food items served by other restaurants?
You’re guessing it right! Its the style of cooking that differentiates the food items served by a restaurant from the food items served by others. Hence knowledge of basic cooking is essential for anyone who wishes to work in the food and beverage industry. So let us learn more about cooking.
Cooking is indeed a skill which not only requires the correct amount of ingredients but also the correct method of cooking to ensure the desired texture, taste, flavor and quality of cooked food. So let us learn more about cooking.
===========================================
Sample 2
Radiation is the process of heat transference directly onto the food being cooked. The heat is transferred by electromagnetic waves, such as microwaves and infrared waves. These waves go directly to the food being cooked, and any object in the path of the rays will also become hot, such as a grill plate.
When food is microwaved, the cooking process is due to the action of electromagnetic waves produced from the magnetron in the microwave oven. Infrared waves are produced from the grill.
These waves cause the food, which is located close to the heat source, to first heat then cook the food.
===========================================
Sample 3
Poaching is the process of gently simmering food in liquid, generally water, stock or wine.
Poaching is particularly suitable for fragile food, such as eggs, poultry, fish and fruit, which might easily fall apart or dry out.
For this reason, it is important to keep the heat low and to keep the poaching time to a bare minimum, which will also preserve the flavor of the food.
The poaching liquid is called court bouillon and a classical court bouillon consists of: an acid (wine, lemon juice), aromatic (bouquet garni), poaching liquid, and mirepoix.
===========================================
Sample 4
Advantages of Microwave Cooking:
(i) Food cooks evenly, quickly and efficiently in the microwave.
(ii) Also the nutrients are preserved and the actual taste of the food is retained to a higher degree.
(iii) Only a minimum amount of oil is required for cooking continental as well as traditional Indian dishes and so it seems desirable from the health point of view.
(iv) Also shorter and controlled cooking time means that the food does not get burnt or over-cooked.
(v) Food may be cooked and served in the same dish.
(vi) Another major advantage is that food is cooked minus the smoke, grease and heat and so the kitchen remains neat and tidy always.
(vii) Microwave has multifarious uses like de-frosting, reheating, etc. of food.
===========================================
Translation - Tamil Sample 1
ஒரு ரெஸ்டாரன்ட், அதில் பரிமாறப்படும் உணவு வகைகள் மற்றும் பெவரேஜுகளை வைத்தே அறியப்படுகிறது என்பதை நாம் அறிவோம். இன்று, அனைத்து ரெஸ்டாரன்ட்களும் ஏறத்தாழ ஒரே மாதிரி உணவுவகைகள் பரிமாறுகின்றன. இருப்பினும், ஒன்று இன்னொன்றை விட பிரபல அடைகிறது. ஆக, பிற ரெஸ்டாரன்ட்களில் பரிமாறப்படும் உணவு வகைகளை விட இவர்களின் உணவு வகைகள் வித்தியாசமாகவும் அதிகச் சுவையுள்ளதாகவும் இருப்பது எதனால்?
ஆம், நீங்கள் சரியாக யூகிக்கிறீர்கள்! சமையல் பாணி தான், ஒரு ரெஸ்டாரன்டில் பரிமாறப்படும் உணவு வகைகளை பிற ரெஸ்டாரன்டுகளில் பரிமாறப்படும் உணவு வகைகளைக் காட்டிலும் வேறுபடுத்திக் காட்டுகிறது. எனவே ஃபுட் அண்டு பெவரேஜ் தொழில்துறையில் பணிசெய்ய விரும்பும் எவருக்கும் அடிப்படை சமையல் அறிவு இன்றியமையாதது. எனவே, சமையல் குறித்து அதிகம் கற்றுக்கொள்வோம்.
சமையல் எனும் கலையில், சரியான அளவு உட்பொருள்களை பயன்படுத்துதல் மட்டுமின்றி, சரியான சமையல் முறையை கையாள்வதும் அடங்கும். சமைத்த உணவின் விரும்பிய டெக்ஸ்சர், சுவை, மணம், தரம் ஆகியவற்றை இதன் மூலம் உறுதிசெய்யும் வகையில் இருக்கவேண்டும். ஆக, சமையல் குறித்து மேலும் அதிகமாக கற்றுக்கொள்வோம்.
===========================================
Sample 2
ரேடியேஷன் நிகழ்முறையில், வெப்பம் நேரடியாக சமைக்கப்படும் உணவுக்கு செலுத்தப்படுகிறது.மைக்ரோவேவ் போன்ற எலக்ட்ரோமேக்னடிக் வேவ் (அலைகள்) மூலம் வெப்பம் செலுத்தப்படுகிறது. இந்த அலைகள், சமைக்கப்படும் உணவிற்கு நேரடியாகச் செல்கிறது. அந்த கதிர்களின் பாதையில் உள்ள எல்லா பொருள்களும் - உதாரணம், கிரில் பிலேட் - சூடாகிவிடும்.
உணவு மைக்ரோவேவ் செய்யப்படும்பொழுது, மைக்ரோவேவ் ஓவனில் உள்ள மேக்னட்ரானில் இருந்து உருவாகும் எலக்ட்ரோமேக்னடிக் அலைகளின் செயலினாலேயே சமையல் நிகழ்கிறது. கிரில்லில் இருந்து இன்ஃப்ரா-ரெட் அலைகள் உருவாகின்றன.
இந்த அலைகள், வெப்ப ஆதாரத்திற்கு நெருக்கமாக உள்ள உணவை முதலில் சூடாக்கி, பின்னர் உணவை சமைக்கிறது.
==========================================
Sample 3
போச்சிங் என்பது, திரவத்தில் - வழக்கமாக தண்ணீர், ஸ்டாக் அல்லது மதுவில்- உணவை மென்கொதிப்பு நிலையில் வைத்திருக்கும் நிகழ்முறை
போச்சிங் குறிப்பாக முட்டை, பவுல்ட்ரி, மீன், பழங்கள் போன்ற எளிதாய் உடையும் - அல்லது காய்ந்துவிடும் - உணவுகளுக்கு பொருத்தமானது
இதனால், வெப்பத்தை தாழ்வாகவும், போச்சிங் நேரத்தை ஆகக் குறைந்தபட்சமாகவும் வைத்திருக்கவேண்டும். இது உணவின் ஃப்லேவரையும் பாதுகாக்கும்.
போச்சிங் திரவத்திற்குப் பெயர் கோர்ட் போவில்லான். ஒரு மரபு ரீதியான கோர்ட் போவில்லானில் உள்ளவை: ஒரு அமிலம் (மது, எழுமிச்சை சாறு), வாசனைப் பொருள் (பொக்கே கார்னி), போச்சிங் திரவம் மற்றும் மைரபாயிக்ஸ்.
==========================================
Sample 4
மைக்ரோவேவ் சமையலின் சாதகங்கள்:
(i) மைக்ரோவேவில் உணவு சீராகவும் விரைவாகவும் திறனுள்ள விதத்திலும் சமைக்கப்படுகிறது.
(ii) ஊட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்பட்டு, உணவின் அசல் சுவை ஏறத்தாழ அப்படியே மாறுபடாமல் இருக்கிறது
(iii) கான்டினன்டல், ட்ரெடீஷனல் இந்தியன் ஆகிய இரு வகை உணவுகளுக்கும் குறைந்தபட்ச அளவே எண்ணெய் தேவைப்படுகிறது. எனவே, சுகாதார கண்ணோட்டத்தில் இது விரும்பத்தக்கதாக தோன்றுகிறது.
(iv) மேலும், சுருக்கமான மற்றும் கட்டுப்பாடுள்ள சமையல் எனும்பொழுது, உணவு கருகுவதோ மிகையாக சமைக்கப்படுவதோ இல்லை.
(v) உணவை ஒரே பாத்திரத்தில் சமைக்கவும் பரிமாறவும் செய்யலாம்
(vi) இன்னொரு முக்கிய சாதகம் என்னவெனில், புகை, கிரீஸ் மற்றும் வெப்பம் இல்லாமல் உணவு சமைக்கப்படுகிறது. எனவே, எந்நேரமும் கிச்சன் சுத்தமாகவே இருக்கும்.
(vii) உணவு டீ-ஃப்ராஸ்டிங், ரீ-ஹீட்டிங் போன்ற பல பிரயோகங்களுக்கு மைக்ரோவேவ் பயன்படுத்தலாம்.
===========================================
English to Tamil: E-learning (Medical) General field: Medical Detailed field: Medical: Health Care
Source text - English Sample1
While caring or treating wounds, you should keep some points in mind. These principles will answer the reasons behind each treatment. First Germs are present in the environment, on the articles and on the skin. These harmful germs are transmitted from the source (i.e., environment) to the new host (i.e., the wound).
In the wound, first, clean areas where there are fewer organisms. Then clean wound areas where there are more organisms. This would minimizes the spread of organisms to the clean area.
When skin breaks, the germs including infected germs enter into the skin and make the skin contaminated.
Nutrients and oxygen are carried to the wound via blood stream and are essential for collagen formation. Moisture facilitates growth and movement of micro-organisms.
Fluid moves through materials by capillary action.Fluid moves downwards as a result of gravitational pull.
Unfamiliar situations produce anxiety. Systematic ways of working saves time, energy and material.
===========================================
Sample 2
" Why do you think first aid is needed for burns?
Burns damage outer skin as well as the tissues inside."
First aid limits the damage and prevents the burn from becoming worse
What do you do if a person’s clothes catch fire?
Push the victim to the ground and roll him to put out the flames.
Wrap the victim in a blanket or carpet as he rolls.
Once the flames are out, cool the skin with cold water. This can be done for as long as 20 minutes until help arrives.
"Some times you notice that the burns are minor. What kind of first aid you give to the victim?
Run cold water over the burnt skin."
Wrap loosely in gauze bandage.
Take the victim to the hospital.
"If the burns are major,
Do not remove the burnt clothing."
Do not immerse the burnt part in cold water.
If the victim is not breathing, start artificial respiration.
Elevate the burnt body.
Cover the burn with cool, moist, and sterile cloth and take the victim to the hospital.
===========================================
Sample 3
" What are the steps in the Fill process of a CAPD? First you need to connect the transfer set to the dialysis bag and catheter.
Connect the transfer set to the bag of dialysis solution and catheter."
Place the solution bag on the pole near the patient. Open the cap on the outlet tube from the solution bag.
" Fill and note the advised volume of solution into the abdomen through the PD catheter. The solution goes in by gravity and takes about 10 minutes.
After filling the solution, close the cap from the solution bag. For some solution bags, you might need to use a clamp"
" The dialysate is left in the abdominal cavity for the recommended time. This is called dwell time.
The dwell time varies from patient to patient. You must follow the doctor's orders regarding this."
" When the dwell time is over, open the cap on the tube of drainage bag. The solution will drain into drainage bag from the abdominal cavity through the catheter by gravity.
The drained fluid is similar to urine, and will be clear yellow in color. This will take about 20 minutes.
Note the color and amount of the drained fluid.
"
"L3T4P6 Once the draining step is complete, restart the fill step, and the cycle continues until the total volume of solution in the bag is complete. The Volume should be same as what you put in the first time. After the entire solution bag is empty, then the cycle is done. These exchanges are most often done 4 times a day with meals and at bedtime.
It takes a total of about 2 hours a day to fill and drain the solution."
===========================================
Sample 4
"How would you provide care for the patients suffering from Narcolepsy.
Schedule the patient's sleep periods."
Encourage them to avoid caffeine, alcohol and nicotine.
Ask them to focus on one small thing at a time.
Make them to exercise on a regular basis.
Be with the patient because it would be dangerous if they have an attack of sudden sleep.
Make sure the patient wears a medical alert bracelet or necklace to alert others.
Watch them if they suddenly fall asleep or become unable to move or speak.
The other treatments include counseling the patient
medication
behavioral changes etc. to help the patient to cope with the effects of Narcolepsy.
===========================================
Sample 5
Blood pressure is measured using of stethoscope and a sphygmomanometer which has a blood pressure cuff.
"If you are using a BP apparatus with mercury, then watch for the mercury level while you take the readings.
In case of an Aneroid sphygmomanometer, watch the dial."
"While measuring the blood pressure of a person, you read the systolic pressure first and then you read the diastolic pressure.
Let’s see the procedure of measuring the systolic and the diastolic pressure of a person.
Squeeze air out of the cuff."
Wrap the cuff 1 inch above the forearm, in line with his heart.
Feel the wrist pulse.
Inflate the bladder till the pulse stops.
Let all the air out of the cuff.
Write down the systolic reading.
Feel the elbow pulse.
Put the earpieces of stethoscope in your ears and place the diaphragm over the elbow pulse.
Inflate the cuff to 30 mm HG above the systolic pressure.
Let the air out of the cuff slowly.
The reading when you first hear the pulse sound is the systolic.
The reading when the pulse stops is the diastolic. Note down this number.
===========================================
Translation - Tamil Sample1
காயங்களுக்கு சிகிச்சை அல்லது பராமரிப்பு அளிக்கும்பொழுது, நீங்கள் சில விஷயங்களை மனதில் வைத்துக்கொள்வது அவசியம். இந்த கோட்பாடுகள் மூலம் ஒவ்வொரு சிகிச்சைக்கும் பின்னணியில் உள்ள காரணங்களை உங்களால் அறியமுடியும். முதலில், சுற்றுச்சூழல் எங்கும், சாமான்களிலும், சருமத்தின் மீதும் கிருமிகள் பரவியுள்ளன. கேடு உண்டாக்கும் இந்தக் கிருமிகள் மூல இடத்தில் இருந்து (அதாவது, சுற்றுச்சூழலில் இருந்து) புதிய இருப்பிடத்துக்கு (அதாவது, காயத்திற்கு) செலுத்தப்படுகிறது.
காயத்தில், முதலில் கிருமிகள் குறைவாக உள்ள பகுதிகளை சுத்தம் செய்யவும். பிறகு, கிருமிகள் கூடுதலாக உள்ள பகுதிகளை சுத்தம் செய்யவும். இதன் மூலம், சுத்தமான பகுதிகளுக்கு கிருமிகள் பரவுவதை குறைந்தபட்சமாக்கலாம்.
சருமம் வெடிக்கும்பொழுது, இன்ஃபெக்ஷன் கிருமிகள் உட்பட சகல கிருமிகளும் சருமத்துக்குள் புகுந்து, சருமத்தை கன்டாமினேஷன் செய்துவிடும்.
உணவுச் சத்துக்களும் ஆக்ஸிஜனும் ரத்த ஓட்டத்தின் வாயிலாகவே காயத்திற்கு சுமந்துசெல்லப்படுகிறது. இவை, கொல்லாஜென் அமைவதற்கு அத்தியாவசியமானவை. நுண்ணியிர் கிருமிகளின் வளர்ச்சி மற்றும் அசைவுக்கு ஈரப்பதம் வசதிசெய்கிறது.
ஃப்லூயிடுகள் கேபில்லரி ஆக்ஷன் மூலமே வஸ்துக்கள் வழியாக செல்லுகிறது. ஃப்லூயிட் கீழ்நோக்கி நகர்வதற்கு காரணமாக இருப்பது, கிராவிடேஷன் புல்.
பரிட்சயமில்லாத சூழ்நிலைகள் பதட்டத்தை உண்டாக்கும். முறையான வழிகளில் பணிசெய்வது நேரத்தையும் சக்தியையும் பொருளையும் சேமிக்கிறது.
===========================================
Sample 2
"தீ காயம் ஏற்பட்டால் ஏன் ஃபஸ்ட் எய்டு தேவை?
தீ காயங்கள், சருமத்தின் வெளிப்பக்கத்தையும் உள்பக்க திசுக்களையும் சேதப்படுத்திவிடுகின்றன.
"
ஃபஸ்ட் எய்டு, சேதத்தை குறைத்து, தீ காயம் மேலும் மோசமடைவதை தடுக்கிறது.
ஒருவரின் ஆடைகளில் தீ பற்றிக்கொண்டால் என்ன செய்வீர்கள்?
பாதிக்கப்பட்டவரை தரையில் தள்ளி, அவரை உருட்டி நெருப்பை அணைக்கவும்.
பாதிக்கப்பட்டவர் உருளும்பொழுது ஒரு போர்வை அல்லது கம்பளியால் அவரை சுற்றவும்.
நெருப்பு அணைந்ததும், குளிர் நீரால் சருமத்திற்கு குளிரூட்டவும். இதை, மேலும் உதவி வரும் வரை 20 நிமிடங்களுக்கு செய்யலாம்.
"சில சமயங்களில் தீ காயங்கள் சிறியளவிலேயே இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். இந்நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு எவ்வகை ஃபஸ்ட் எய்டு அளிப்பீர்கள்?
எரிந்துவிட்ட சருமத்தின் மீது குளிர் நீரை ஊற்றவும்.
"
குளிர்ந்த, ஈரமான, ஸ்டெரைல் செய்த துணியால் தீ காயத்தை மறைத்து, பாதிக்கப்பட்டவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லவும்.
===========================================
Sample 3
"CAPD யின் ஃபில் நிகழ்வுமுறைகான செயல்கள் யாவை? முதலில், ட்ரான்ஸ்ஃபர் செட்டை டயாலிஸிஸ் பேக் மற்றும் கெத்தீடருடன் இணைக்கவேண்டும்.
ட்ரான்ஸ்ஃபர் செட்டை டயாலிஸிஸ் சொல்யூன் பேக் மற்றும் கெத்தீடருடன் இணைக்கவும்.
"
சொல்யூஷன் பேக்கை நோயாளிக்கு அருகில் நிற்கும் கம்பியின் மீது வைக்கவும். சொல்யூஷன் பேக்கில் இருக்கும் அவுட்லெட் டியூபின் மேல்மூடியை திறக்கவும்.
ஆலோனயளித்த அளவு சொல்யூஷனை PD கெத்தீடர் வாயிலாக அடிவயிற்றுக்குள் செலுத்தி நிரப்பி, அதன் அளவை குறிப்பு எடுத்துக்கொள்ளவும். புவி ஈர்ப்பு விசையால் அந்த சொல்யூஷன் உள்ளே செல்கிறது. அதற்கு சுமார் 10 நிமிடங்கள் எடுக்கும். சொல்யூஷனை நிரப்பிய பின், சொல்யூஷன் பேக்கின் மேல்மூடியை அடைக்கவும். சிலவகை சொல்யூஷன் பேக்குகளில் கிளாம்ப் பயன்படுத்தப்படும்.
"பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்கு டயாலிஸேட்டை அடிவயிற்றுக் கலனில் விட்டுவைக்கவும். இந்த கால அளவிற்குப் பெயர், ட்வெல் டைம்.
ட்வெல் டைம், நோயாளிக்கு நோயாளி வித்தியாசப்படும். எனவே, இந்த விஷயத்தில் மருத்துவரின் உத்தரவை பின்பற்றுவது அவசியம்.
"
"ட்வெல் டைம் முடிந்த பின், ட்ரெயினேஜ் பேக் டியூபின் மூடியை திறந்துவிடவும். அந்த சொல்யூஷன் அடிவயிற்றுக் கலனில் இருந்து கெத்தீடர் வழியாக புவி ஈர்ப்பு விசையால் ட்ரெயினேஜ் பேக்கிற்குள் வடிந்துவிடும்.
ட்ரெயின் நீர் சிறுநீரைப் போன்றது. அது தெளிவான மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகும்.
ட்ரெயின் நீரின் நிறம் மற்றும் அளவை குறித்துக் கொள்ளவும். "
"ட்ரெயினிங் நிறைவடைந்ததும், ஃபில் செயலை மீண்டும் துவக்கவும். இப்படியே, பேக்கில் உள்ள சொல்யூஷன் தீரும் வரை, சுழற்சியை தொடர்ந்து செய்யவும். நீங்கள் முதல் முறை செலுத்தும் அளவே அடுத்தடுத்த முறைகளிலும் செலுத்தவேண்டும். பேக் முற்றிலும் தீர்ந்துவிடும்பொழுது, சுழற்சியும் முடிவடைகிறது. இந்த எக்ஸ்சேஞ்சுகள் பெரும்பாலும் ஒருநாளைக்கு 4 முறை - சாப்பாட்டு மற்றும் உறங்கச் செல்லும் வேளைகள் - செய்யப்படும்.
சொல்யூஷனை ஃபில் மற்றும் ட்ரெயின் செய்ய ஒரு நாளைக்கு மொத்தம் சுமார் 2 மணிநேரங்கள் எடுக்கும்.
===========================================
Sample 4
"நார்கோலெப்சியால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிக்கு நீங்கள் எவ்வாறு பராமரிப்பு அளிப்பீர்கள்?
நோயாளியின் உறக்க நேரங்களை ஷெட்யூல் செய்யவும். "
கேஃப்பைன், மது மற்றும் நிகோடினை தவிர்க்குமாறு அவர்களை ஊக்குவிக்கவும்.
ஒரு நேரத்தில் ஒரு சிறு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துமாறு அவர்களிடம் கூறவும்.
வழக்கமாக அவர்களை உடற்பயிற்சி செய்யவைக்கவும்.
நோயாளியுடனே இருக்கவும். ஏனெனில், அவர்களுக்கு திடீரென உறக்கம் வந்துவிட்டால், அது அபாயகாரமானதாக விளங்கும்.
நோயாளி, பிறரை உஷார் படுத்துவதற்காக, ஒரு மெடிகல் அலர்ட் பிரேஸ்லெட் அல்லது நெக்லேஸ் அணிவதை உறுதிசெய்யவும்.
அவர் திடீரென தூங்கி விழுகிறாரா, அல்லது அசைவோ பேச்சோ இல்லாமல் ஆகிவிடுகிறாரா என்பதை கண்காணிக்கவும்.
இதற்கான பிற சிகிச்சைகள்: நோயாளியுடன் கலந்தாய்வு செய்தல்.
மெடிகேஷன்
நடத்தை மாற்றம் போன்றவை. இவை மூலம், நோயாளியால் நார்கோலெப்சியின் பாதிப்புகளை சமாளிக்க இயலும்.
===========================================
Sample 5
பிளட் பிரஷரை அளப்பதற்கு ஒரு ஸ்டெதஸ்கோப்பும், பிளட் பிரஷர் கஃப் வைத்த ஒரு ஸ்பிக்மோ மானோமீட்டரும் பயன்படுத்தப்படுகின்றன.
"மெர்குரிக்கு உள்ள ஒரு BP சாதனத்தை பயன்படுத்தினால், ரீடிங்குகளை எடுக்கும்பொழுது மெரிகுரி மட்டத்தை கவனிக்கவும்.
அனிராய்டு ஸ்பிக்மோ மானோமீட்டர் பயன்படுத்தினால், டயலை கவனிக்கவும். "
"ஒருவரின் பிளட் பிரஷரை அளப்பதற்கு, முதலில் சிஸ்டோலிக் பிரஷரும், பின்னர் டயஸ்டோலிக் பிரஷரும் எடுக்கவும்.
இப்பொழுது, ஒருவரின் சிஸ்டோலிக் பிரஷர் மற்றும் டயஸ்டோலிக் பிரஷர் எடுக்கும் முறையை கவனிப்போம்.
காற்றை கஃப்பில் இருந்து அமுக்கி வெளியேற்றவும். "
கஃப்பை கரத்தின் முன்பகுதியிலிருந்து 1 இஞ்சு மேல்புறம், இருதயத்தின் மட்டத்தில் சுற்றவும்.
ரிஸ்ட் (மணிக்கட்டு) பல்சை உணர்ந்துபார்க்கவும்.
பல்சு நிற்கும் வரை பிலாடரை இன்ஃப்லேட் செய்யவும்.
அனைத்து காற்றையும் கஃப்பிலிருந்து வெளியேற்றவும்.
சிஸ்டோலிக் ரீடிங்கை எழுதிவைக்கவும்.
எல்போ (முழங்கை) பல்சை உணர்ந்து பார்க்கவும்.
ஸ்டெதஸ்கோப்பின் இயர்பீசுகளை உங்கள் காதுகளில் இட்டு, எல்போ பல்சின் மீது டயாஃப்ரமை வைக்கவும்.
கஃப்பிற்குள், சிஸ்டோலிக் பிரஷரை விட 30 mm/HG கூடுதலான அளவிற்கு இன்ஃப்லேட் செய்யவும்.
கஃப்பில் இருந்து காற்றை மெதுவாக வெளியேற்றவும்.
முதலில் பல்சு உங்களுக்குக் கேட்கும்பொழுது எடுக்கும் ரீடிங்கு தான், சிஸ்டோலிக்.
அடுத்து, பல்சு நின்றுவிடும்பொழுது எடுக்கும் ரீடிங்கு தான், டயஸ்டோலிக். இந்த எண்ணை குறித்து வைக்கவும்.
===========================================
English to Tamil: E-learning (Physics) General field: Science Detailed field: Physics
Source text - English Sample 1
To read a laboratory thermometer, keep the following things in mind:
• A laboratory thermometer needs to be kept upright and not tilted.
• Unlike a clinical thermometer, a laboratory thermometer should be read while its bulb is surrounded from all sides by the substance of which the temperature is to be measured. You should not take it out to read the temperature.
• The bulb of a laboratory thermometer should not be in contact with the container.
"Let’s try to read the temperature of the milk using this laboratory thermometer. But every time, the mercury falls down before it can be read.
A laboratory thermometer doesn’t have a kink. That’s why, the mercury contracts into the bulb as soon as you remove the thermometer from the milk.
You need to keep in mind the precautions we just talked about.
Read the thermometer while its bulb is surrounded from all sides by the milk.
See it reads about 50 degree Celsius.
There is a lot of concern over the use of mercury in thermometers. Mercury is a toxic substance and is very difficult to dispose off, if a thermometer breaks. These days, digital thermometers are available, which do not use mercury
===========================================
Sample 2
You observed that the dog was moving and it stopped when Tina applied a pulling force on its leash, whereas the shopping cart was stationary, before James pushed it.James is playing hockey. While playing hockey, James flicks the ball passed to him towards the goal by applying force through his hockey stick. In doing so, he changes the direction in which the ball was moving.You can say a force can change the direction of motion of the object on which it is applied.When you crumple a piece of paper - the shape of the paper changes.Force can change the shape of the object on which it is applied.
"A force may:
• Change the state of motion of an object,
• Change the direction of motion of an object or
• Change the shape of an object."
==========================================
Sample 3
"Speed of an object is the rate at which an object covers a given distance.
Speed is calculated as a ratio of distance covered to the time taken to cover that distance.
"Thus:
• An object that covers a relatively large distance in a short amount of time is moving at a high speed.
• Conversely, a slow-moving object has a low speed and covers a relatively small amount of distance in a relatively longer duration.
• An object at rest has no speed.
"Speed is measured in metres per second in the SI system. Typically, you measure speed in kilometres per hour.
• 1 kilometre per hour equals 5 divided by 18 metres per second or
• 1 metre per second equals 3.6 kilometres per hour
===========================================
Sample 4
"Objects seen in the mirror are closer than they appear.’
You may have seen this warning sticker on the rear view mirrors in your cars and bikes. These rear view mirrors are actually convex mirrors. Rear view mirrors help the driver to keep an eye on a large space behind the vehicle, by providing a wide field of view.
The behaviour of the light rays reflected from a convex mirror varies based on the angle of incidence on the mirror: Let’s take a look at a few cases of reflection of a light ray from a convex mirror, taking the example of a rear view mirror:
In the first case, incident rays is parallel to the principal axis. In this situation, the reflected ray appears to pass through the focus. In a rear view mirror, incident rays parallel to the principal axis enables the driver to see the car travelling behind his car.
In the second case, let us consider incident rays directed towards the centre of curvature. Here, the angle of incidence is zero. Hence, the angle of reflection too, is zero. Thus, the reflected rays retraces the path of the incident rays and appears to pass through the centre of curvature. This enables the driver to see the parking meter on the other side of the road.
Next, look at incident rays that is directed towards the principal focus. The reflected ray goes parallel to the principal axis. This is how the driver is able to see the traffic signal, which the car has crossed.
===========================================
Sample 5
"Motion of objects or bodies can be:
• along a straight line called linear motion,
• Circular motion,
• Vibratory motion or
• A Combination of two or more of the above the three types of motions.
"
Linear motion involves an object moving along a straight line.For example, cars moving along the straight path in the circuit exhibit linear motion.In case of circular motion, an object moves along a circular path, like the motions of a merry go round, or a giant wheel.
In case of vibratory motion, an object moves to and fro from a fixed position. The motion of the needle of a sewing machine at work is an example of this type of motion.
Translation - Tamil Sample 1
சோதனைக்கூட வெப்பநிலைமானி அளவுகளை கண்ணுறுவதற்கு, பின்வரும் விஷயங்களை நினைவில் வைக்கவும்:
• சோதனைக்கூட வெப்பநிலைமானியை நிமிர்த்தி வைக்கவும்; சாய்த்துவைக்கக் கூடாது.
• மருத்துவ வெப்பநிலைமானிக்கு மாற்றமாக, வெப்பநிலை கண்டறியவேண்டிய பொருள் சோதனைக்கூட வெப்பநிலைமானியின் குமிழை நாலாபுறத்திலும் சூழ்ந்திருக்கும் நிலையில் வெப்பநிலைமானியின் அளவுகளை கண்ணுறவும். அதை வெளியில் எடுத்து வெப்பநிலையை கண்ணுறுதல் கூடாது.
• சோதனைக்கூட வெப்பநிலைமானியின் குமிழ் பாத்திரத்தை தொடாமல் இருப்பது அவசியம்.
இந்த சோதனைக்கூட வெப்பநிலைமானி பயன்படுத்தி
பாலின் வெப்பநிலையை அளவிட முயற்சிப்போம். ஆனால், ஒவ்வொரு முறையும் அளவுகளை கண்ணுறுவதற்கு முன் பாதரசம் கீழே இறங்கிவிடும்.
சோதனைக்கூட வெப்பநிலைமானியில் ஒரு வளைந்த பகுதி இல்லை. எனவே தான், வெப்பநிலைமானியை பாலில் இருந்து எடுத்ததும் பாதரசம் சுருங்கி குமிழுக்குள் சென்றுவிடுகிறது.
நாம் இதுவரை உரையாடிய முன்னெச்சரிக்கைகளை நீங்கள் நினைவில் வைப்பது அவசியம்.
வெப்பநிலைமானியின் குமிழை பால் நாலாபுறத்திலும் சூழ்ந்திருக்கும் நிலையில் வெப்பநிலைமானியின் அளவுகளை கண்ணுறவும்.
அதில் சுமார் 50 டிகிரி செல்சியஸ் நெடுக்கத்திற்கு அளவுகள் உள்ளன.
வெப்பநிலைமானிகளில் பாதரசம் பயன்படுத்துவது குறித்து நிறைய பிரச்சனைகள் உள்ளன. பாதரசம் ஒரு நச்சுப் பொருள். வெப்பநிலைமானி உடைந்தால் பாதரசத்தை வெளியேற்றுவது மிகக் கடினம். இந்நாட்களில், பாதரசம் பயன்படுத்தாத எண்ணுரு (டிஜிட்டல்) வெப்பநிலைமானிகள் கிடைக்கின்றன.
===========================================
Sample 2
நாய் நகர்ந்துகொண்டிருக்க, அதன் வார் மீது டீனா ஒரு இழுவிசை செலுத்தியபொழுது அது நின்றுவிட்டதை கவனித்தீர்கள். ஆனால், அங்காடிப் பொருள் வண்டியை ஜேம்ஸ் தள்ளுவதற்கு முன் அது ஓய்வுநிலையில் இருந்தது. ஜேம்ஸ் ஹாக்கி விளையாடுகிறார். அதன் போது, தனக்கு அனுப்பப்பட்ட பந்து மீது தன் ஹாக்கி குச்சி மூலம் விசை செலுத்தி அதை அடைவுக் கம்பம் நோக்கி உந்தித் தள்ளுகிறார். இந்த செய்கை மூலம், பந்து நகரும் திசையை ஜேம்ஸ் மாற்றுகிறார். ஆக, ஒரு பொருள் மீது செயல்படும் விசையினால் அப்பொருளின் நகர்வுதிசையை மாற்றவியலும் எனக் கூறலாம். ஒரு காகிதத் துண்டை கசக்கும்பொழுது காகிதத்தின் வடிவம் மாறிவிடுகிறது. ஆக, ஒரு பொருள் மீது செயல்படும் விசையினால் அப்பொருளின் வடிவத்தை மாற்றவியலும்.
விசை:
• ஒரு பொருளின் நகர்வுநிலையை மாற்றலாம்,
• ஒரு பொருளின் நகர்வுதிசையை மாற்றலாம் அல்லது
• ஒரு பொருளின் வடிவத்தை மாற்றலாம்.
===========================================
Sample 3
ஒரு பொருளின் வேகம் என்பது, ஒரு குறிப்பிட்ட தொலைவை அந்தப் பொருள் கடக்கும் வீதம். வேகத்தை கணக்கிடுவதற்கு, தொலைவை கடக்க எடுத்துக்கொண்ட நேரத்தால் தொலைவை வகுக்கவேண்டும்.
ஆக:
• ஒரு பொருள் சிறிதளவு நேரத்தில் பெரியளவு தொலைவை கடக்கிறது என்றால், அது உயர் வேகத்தில் நகர்கிறது.
• மறுபுறம், மெதுவாக நகரும் ஒரு பொருள் குறைந்த வேகம் கொண்டுள்ளது. அது ஒப்பீட்டளவு நீண்ட நேரத்தில் ஒப்பீட்டளவு சிறிய தொலைவை கடக்கிறது.
• ஓய்வுநிலையில் உள்ள பொருளுக்கு வேகம் இல்லை.
பன்னாட்டு அலகு (SI) முறையில், வேகத்தின் அலகு மீட்டர்கள்ஃவினாடி. வழக்கமாக நீங்கள் கிலோமீட்டர்கள்ஃமணி என அளவிடுகிறீர்கள்.
• 1 கிலோமீட்டர்ஃமணி என்பது 5ஃ18 மீட்டர்கள்ஃவினாடி என்பதற்குச் சமம் அல்லது
• 1 மீட்டர்ஃவினாடி என்பது 3.6 கிலோமீட்டர்கள்ஃமணி என்பதற்குச் சமம்.
===========================================
Sample 4
குவி ஆடியிலிருந்து எதிரொலிக்கும் ஒளிக் கதிர்களின் செயல்பாடு, ஆடி மீதான படு கோணத்தைப் பொறுத்து மாறுகிறது: ஒரு பின்னோக்குக் கண்ணாடியின் உதாரணத்தை எடுத்துக்கொண்டு, குவி ஆடியிலிருந்து எதிரொலிக்கும் ஒளிக் கதிர்களின் சில சந்தர்ப்பங்களை கவனிப்போம்:
முதல் சந்தர்ப்பத்தில், படுகதிர்கள் முதன்மை அச்சுக்கு இணையாக உள்ளன. இச்சூழலில், மீள்கதிர் குவியம் வழியே செல்வதாகத் தோன்றுகிறது. பின்னோக்குக் கண்ணாடியில், முதன்மை அச்சுக்கு இணையாக விழும் படுகதிர்கள் மூலம் ஓட்டுநர் தன் காருக்குப் பின்னால் வரும் காரை பார்க்க முடிகிறது.
இரண்டாவது சந்தர்ப்பத்தில், வளைவு மையம் நோக்கி செலுத்தப்படும் படுகதிர்களைக் கருதுவோம். இதில், படு கோணம் சுழியாக உள்ளது. எனவே, மீள் கோணமும் சுழியாகிவிடும். ஆக, மீள்கதிர்கள் படுகதிர்களின் பாதைச் சுவட்டிலேயே திரும்பி, வளைவு மையம் வழியே செல்வதாகத் தோன்றுகின்றன. இதன் பலனாக, சாலையின் மறுபக்கம் உள்ள வாகனநிறுத்த மானியை ஓட்டுநரால் பார்க்கமுடிகிறது.
அடுத்தது, முதன்மைக் குவியம் நோக்கி செலுத்தப்படும் படுகதிர்களை நோக்குங்கள். மீள்கதிர் முதன்மை அச்சுக்கு இணையாகச் செல்கிறது. இதன் மூலம் தான், கார் கடந்திருக்கும் சைகை விளக்கை ஓட்டுநரால் காணமுடிகிறது.
===========================================
Sample 5
பொருட்களின் அல்லது உடல்களின் இயக்க வகைகள்:
• நேர் கோட்டில் அமையும் இயக்கத்துக்குப் பெயர், நேர்கோட்டு இயக்கம்,
• சுழற்சி இயக்கம்,
• அதிர்வு இயக்கம் அல்லது
• மேற்கண்ட மூவகை இயக்கங்களில் ஒன்று அல்லது இரண்டின் கலவை.
நேர்கோட்டு இயக்கத்தில், ஒரு பொருள் நேர் கோட்டில் நகர்கிறது. உதாரணமாக, சுருளில் நேர்கோட்டில் நகரும் கார்கள் நேர்கோட்டு இயக்கத்தை வெளிப்படுத்துகின்றன. சுழற்சி இயக்கத்தில், ஒரு பொருள் வட்ட வடிவப் பாதையில் நகர்கிறது. உதாரணமாக - ராட்டன் தூரி, ராட்சசச் சக்கரம் போன்றவற்றின் இயக்கங்கள்.
அதிர்வு இயக்கத்தில், ஒரு பொருள் ஓர் குறிப்பிட்ட இருப்பிடத்திலிருந்து முன்னும் பின்னும் நகர்கிறது. தையல் எந்திரத்தின் ஊசி இயங்கும்பொழுது ஏற்படும் இயக்கம், இந்த வகை இயக்கத்திற்கு ஓர் உதாரணம்.
English to Tamil: Fitness/Healthcare General field: Medical Detailed field: Medical: Health Care
Source text - English Sample 1
These Notes offer a summary, in simple English, of topics discussed in the Seminar together with a translation in (local) language with the sole object of facilitating the student’s better understanding of the Certified Fitness Trainer (CFT) course’ official syllabus contained in the text book “Fitness – The Complete Guide” (edition 8.6.6) by Dr. Frederick C Hatfield.
These Notes do not in any way propose to be nor are they deemed to be the official text book of the CFT or any other ISSA course/s.
Possession in any manner of these Notes does not imply or confirm or prove an enrolment to the CFT or any other ISSA course.
NOT FOR SALE OR COMMERCIAL DISTRIBUTION
===========================================
Sample 2
WHY IS PERSONAL TRAINING REQUIRED?
Fitness plays major role in promoting good health, prevention of illnesses.
According to the American Heart Association, physical inactivity and low fitness level are primary risk factors along with smoking, hypertension, high cholesterol.
25% of Americans lead sedentary life, face high obesity and heart risk – poor eating habits, sedentary lifestyle, poor lifestyle (e.g. smoking), stress .. etc.
Dr. Ralf Paffenberger studied 17,000 Harvard University graduates. His study found that men who expended approximately 300 calories (walking briskly 45 mins) daily reduced death rates from all causes by 28% and lived about 2 years longer than their sedentary classmates!
Steven Blair (Institute Of Aerobics, Dallas, US) confirmed that a modest amount of exercise (mild to moderate intensity) significantly reduces mortality rate – higher the fitness level, lower the death rate.
Exercise is medicine! Fitness levels decreases ultimate medical and insurance costs!
===========================================
Sample 3
Academic standards
Certification only if person passes exams.
Must hold valid CPR & First Aid Certificate.
Certificate will not be issued until full fees paid.
Practical theory knowledge essential.
ISSA professional standards
Be accurate and truthful.
Charge fee according to service, responsibility
Continuing education – workshops:
Earn CEUs to renew your ISSA certificate
Integrity, truth, objectivity
Client’s needs and preferences – fitness goals
Do not endanger or injure client.
Consult doctor if client has medical condition
Do not diagnose medical condition of client.
Do not prescribe medication to clients
Current CPR and First Aid knowledge
Good communicator
Good motivator – affirmation.
Team work
Client Confidentiality
Maintain dignity – do not get involved with clients!
===========================================
Sample 4
Weight Training
• Cardiovascular / aerobic benefits – exercise at 60-65% THR for 30-40 minutes of linear, non-restricted training. Circuit training
• Defines, strengthens, increases muscle size.
• Serious weight training in addition to cardio lowers fat content more than only cardio.
• Extreme cardio – like Marathon running - heart larger but weight training makes the heart stronger.
• In extreme endurance events, high risk of muscle necrosis of muscle cells of the calf – gastrocnemius and soleus.
• Non-impacting! Explosive or GENTLE!
• Offers relief / prevents medical conditions
• Applicable for all ages (over 6 years)
===========================================
Sample 5
Strength
Strength is ability of body to contract its muscles with (maximum) force under influence of:
1) Structural / anatomical / biomechanical factors -> how efficient a machine
2) Physiological / biochemical factors -> internal systems to create energy, repair, training effect
4) External / environmental factors ->exploit (OVERCOME) gravity, altitude, equipment, playing surface, etc.
In fitness or sport, strength is ability of body to exert musculoskeletal force against an external resistance.
Dramatically different definition as compared to old definition anaerobic (strength) v/s aerobic (endurance) “continuum” – strength
endurance at each end!
Age, sex no bar to develop strength!
Complex –interrelated factors. No one single definition!
You can MANIPULATE strength to your advantage – in integrated manner
Valsalva Maneuver – for advanced athletes only; Not for beginners or special populations. Prevents / manages Valsalva Phenomenon.
Heavy weight lifting with explosive movements load the spine. I
Intra-abdominal and intra-thoracic pressure build up against blood vessels supplying O2 to heart and chest. These vessels may collapse and restrict O2 to heart. Person thus faces risk of injury, fainting or even death. This is called Valsulva Phenomenon.
Inhale during negative phase. Then use glottis to hold breath with simultaneous contraction of abs, rib cage muscles. Exhale during final ⅓rd of ROM. Do not hold breath over 8 secs.
Normal breathing, without holding breath, for beginners, special populations. In eccentric phase inhale through nose; in concentric phase exhale through mouth - “pursed lips”.
Warm Up
General – for whole body. Specific – only those muscles to be worked immediately.
Benefits: Increases muscle contraction rate, intramuscular electrical activity, limit strength, amount of time contractions maintained, ability of connective tissue to accept, absorb force, muscle temp due to dissociation of O2 from RBC, nerve conduction velocity, number of capillaries opened up. Reduction in injury, fatigue risk.
Ideal for short, explosive sports, not for endurance or progressive events.
Direct warm-up only for athletes. Indirect for 4-5 mins ok too – e.g. stretching, cycling, etc.
Cool down
Light aerobic activity advisable for high intensity anaerobic activity. Removes lactic acid in blood stream, muscles. DOMS minimized.
RHR and BP normalized. Cardiac output of 80-85% to muscles reduce to resting normal 15-20% so that organs begin to receive blood flow. Prevents nausea.
===========================================
Sample 7
Basic Anatomy & Physiology
Anatomy – science of body structure
Physiology – science of how our body functions
• Body structured at 5 levels: chemicals cells associate to form tissues tissues function together in body systems human body.
• Chemical level: atoms, molecules. 98% of body composed of 6 elements - oxygen, carbon, hydrogen, nitrogen, calcium and phosphate.
A - Cells:
Atoms, molecules create cells – building blocks. Basic life.
• About 100 to 300 trillion cells of all types, shapes, sizes in each body!
• E.g. striated muscle cells several inches long capable of contracting => muscle contractions. Fat cells small, round and store fatty acids for energy during lean times.
• Self-reproducing ability. Body created from union of (sex cells) female egg and male sperm => zygote – starting point of the 100 trillion cells!
• Each cell divides into 2 and so on in a process that continues for ever. After total number reached a relatively fixed number, cells divide to replace old or dead cells.
• Cell components or organelles include plasma membrane, nucleus, ribosomes, endoplasmic, reticulum, Golgi apparatus, lysosome, mitochondria.
• Plasma Membrane: Made of proteins, phospholipid bi-layers (fatty acids, gycerol, phosphate molecules). Fatty acids attached to 3 carbohydrateon glycerol molecules > triglycerides. Fat essential to life, muscle mass dev, endurance running! It absorbs and transports nutrients, pushed out toxins. Insulin hormone stimulates intake of glucose and amino acids across membrane.
• Nucleus: Darker in color, control center of cell. Houses genetic material – DNA (De-oxy-ribono-nucelic Acid) – strands form 46 chromosomes (23 pairs) which decide how we look, etc. One set each from male sperm, female egg. Nucleus production of substances needed by cells, with help of messenger RNA (Ribonucleic Acid). If certain amino acids missing, protein chains incomplete. Hence protein intake mandatory!
• Golgi Apparatus: They create carbohydrate biomolecules and then combine with proteins to form glycoproteins. Glycoproteins function as enzymes, hormones, antibodies, structural proteins, etc.
• Mitochondria: Generate energy. ATP resides here. Involved in protein synthesis and lipid metabolism.
B - Tissues: Basic units of function, structure. (Cells – basic units of life.) Aggregation of cells bound together, working to perform a common function. Classified as: Epithelial, Connective, Muscle, Nervous.
• Epithelial: Covering layer of body (skin), inner cavities, organs, etc. Protective from outside, from inside work as absorbing, secreting tissues – e.g. stomach lining.
===========================================
Translation - Tamil Sample 1
இந்தக் குறிப்புகள், கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்ட பாடத்தலைப்புகள் குறித்து எளிய தமிழ் நடையில் சுருக்கவுரை வழங்குகிறது. இதன் ஒரே நோக்கம், டாக்டர் ஃப்ரெடரிக் சி ஹாட்ஃபீல்டு எழுதிய "உடல் ஆரோக்கியம் - ஒரு முழுமையான வழிகாட்டி" (Fitness – The Complete Guide) எனும் பாடப் புத்தகத்தில் உள்ள சர்டிஃபைடு ஃபிட்னஸ் ட்ரெயினர் (CFT) படிப்பின் உத்யோகப்பூர்வ பாடத்திட்டம் குறித்து மாணவர்கள் நன்றாக விளங்குவதற்கு வசதிசெய்வதே.
இந்தக் குறிப்புகள் எவ்விதத்திலும் CFT அல்லது பிரிதொரு ISSA படிப்பு/களின் உத்யோகப்பூர்வ பாடப்புத்தகமாக முன்நிறுத்தப்படவோ திட்டமிடப்படவோ இல்லை.
இந்தக் குறிப்புகளை எவ்வடிவில் வைத்திருந்தாலும், அது CFT அல்லது பிரிதொரு ISSA படிப்பில் சேர்ந்ததற்கான அர்த்தமோ உறுதிப்பாடோ சான்றோ அல்ல.
இது விற்பனை அல்லது வணிக விநியோகத்திற்கு அல்ல
==========================================
Sample 2
சுய பயிற்சி ஏன் தேவை?
உடல்நலத்தை ஊக்குவிப்பதற்கும் நோய்நொடிகளை தடுப்பதற்கும், ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
அமெரிக்க ஹார்ட் அசோசியேஷனின் கூற்றுப்படி - புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், உயர் கொலஸ்டிரால் அளவு ஆகிய அடிப்படை அபாயக் காரணிகளின் பட்டியலில் அடங்கியுள்ள வேறு இரண்டு விஷயங்கள்: உடலுழைப்பு இன்மை மற்றும் குறைவான ஆரோக்கிய நிலை.
25% அமெரிக்கர்கள் உடலிழைப்பு இல்லாத வாழ்வை மேற்கொள்கின்றனர்; உயரளவு உடல் பருமன் மற்றும் இருதய நோய் அபாயம் கொண்டுள்ளனர் - முறையற்ற உணவுப் பழக்கங்கள், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை பாணி, முறையற்ற வாழ்க்கை பாணி (எ.டு.புகைப்பிடித்தல்), மன அழுத்தம் போன்றவை.
டாக்டர் ரால்ஃப் பாஃப்பன்பெர்கர் 17000 ஹார்வார்டு பல்கலைக்கழக பட்டதாரிகளை ஆய்வுக்கு உட்படுத்தினார். அவருடைய ஆய்வில் கண்டறியப்பட்ட ஒரு விஷயம்: தினசரி 300 கலோரிகளை செலவிடும் (45 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பான நடைபோடும்) மனிதர்களுக்கு, அனைத்து காரணங்களாலும் ஏற்படும் இறப்பு விகிதம் 28% குறைவாக இருந்தது. அவர்கள், உடலுழைப்பு இல்லாத தங்கள் வகுப்பறை நண்பர்களை விட சுமார் 2 வருடங்கள் கூடுதலாக வாழ்ந்தனர்!
ஸ்டீவன் ப்ளாயர் (இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏரோபிக்ஸ், டல்லாஸ், அமெரிக்கா) உறுதிசெய்த ஒரு விஷயம்: சிறிதளவு உடற்பயிற்சி (குறைவான முதல் மிதமான பளுவில்) இறப்பு விகிதத்தை கனிசமாகக் குறைக்கிறது. ஆரோக்கிய அளவு உயர உயர, இறப்பு விகிதமும் குறைவடைகிறது.
உடற்பயிற்சியே மருந்து! நல்ல ஆரோக்கிய அளவுகளினால், இறுதியான மருத்துவ மற்றும் காப்பீட்டு செலவுகள் குறைகின்றன!
===========================================
Sample 3
பயிலகத் தரங்கள்
தேர்வுகளில் வெற்றிபெற்றாலே சான்றிதழ் அளிக்கப்படும்.
தகுந்த CPR மற்றும் முதலுதவிச் சான்றிதழ் வைத்திருக்கவேண்டும்.
படிப்புக் கட்டணம் முழுவதையும் செலுத்தும் வரை சான்றிதழ் வழங்கப்படாது.
செயல் கொள்கை ரீதியான அறிவு அத்தியாவசியமானது.
ISSA உத்யோகத் தரங்கள்
துல்லியம் மற்றும் வாய்மை பேணவேண்டும்.
சேவை, பொறுப்பு ஆகியன பொறுத்து கட்டணம் விதிக்கவும்.
தொடரும் கல்வி - பட்டறைகள்:
CEU கள் பெற்று, உங்கள் ISSA சான்றிதழை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
நாணயம், வாய்மை, புறநிலை நோக்கு
வாடிக்கையாளரின் தேவைகள் மற்றும் விருப்பங்கள் - உடல் ஆரோக்கிய குறிக்கோள்கள்
வாடிக்கையாளருக்கு ஆபத்தோ காயமோ ஏற்படுத்திட வேண்டாம்.
வாடிக்கையாளருக்கு மருத்துவக் கோளாறு இருப்பின், மருத்துவரை ஆலோசிக்கவும்.
வாடிக்கையாளரின் மருத்துவக் கோளாறுக்கான நோய்க்குறி அறிவதில் (டயக்னாஸ்) ஈடுபடவேண்டாம்.
தற்போதைய CPR மற்றும் முதலுதவி அறிவு.
கருத்துப் பரிமாற்றத்தில் சிறந்து விளங்குதல்.
நல்ல ஊக்குவிப்பாளர் - உறுதியூட்டுதல்.
ஒன்றுபட்ட உழைப்பு
வாடிக்கையாளர் ரகசியம் பேணுதல்
கண்ணியம் காத்தல் - வாடிக்கையாளருடன் நெருக்கம் அடையவேண்டாம்!
===========================================
Sample 4
வெயிட் பயிற்சி
உலகில் மிகப் பொதுவான, பிரபலமானது!
காரணங்கள்
• ரெஸ்டு ஹார்ட் ரேட்டை குறைக்கிறது
• ஓய்வுநிலை ரத்த அழுத்தத்தை நிலைப்படுத்துகிறது.
• லிபிட் அளவுகளை இயல்புநிலைக்கு கொண்டுவர உதவுகிறது - கொலஸ்டிரால்/ட்ரைக்ளிசரைடுகள்
• எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது.
• கொழுப்பு "ஆஃப்டர் பர்ன்" தூண்டப்படுகிறது - 48 மணிநேரங்கள்.
• கார்டியோவாஸ்குலர்/ஏரோபிக் பலன்கள் - 60-65% THR ல் உடற்பயிற்சி. இது 30-40 நிமிடங்கள் லீனியர்,கட்டுப்படுத்தப்படாத பயிற்சிக்காக. சர்கியூட் பயிற்சி.
• தசை அளவை வரையறுக்கிறது. வலுவூட்டுகிறது, அதிகரிக்கிறது.
• கார்டியோ உடன் கூடுதல் சீரியஸ் வெயிட் பயிற்சி மூலம், கார்டியோ மட்டும் எடுப்பதை விட கொழுப்பு அளவு குறைகிறது.
• மிகையான கார்டியோ - மாரத்தான் ஓட்டம் போன்றது - இருதயம் கூடுதல் விரிவடைகிறது. எனினும், வெயிட் பயிற்சி மூலம் .இருதயம் கூடுதல் வலுப்பெறுகிறது.
• மிகையான என்டியூரன்ஸ் சந்தர்ப்பங்களில், கெண்டைக்கால் தசை செல்களின் தசை நெக்ராசிஸ், கேஸ்ட்ராக்நீமியஸ் மற்றும் .சோலியஸ் ஏற்படும் ஆபத்து அதிகம்.
• பளு இல்லாமல்! துடிப்பெழுச்சியுடன் அல்லது மென்மையாக!
• நிவாரணம் அளிக்கிறது/ மருத்துவக் கோளாறுகளை தவிர்க்கிறது.
• (6 வயதுக்கு மேற்பட்ட) எல்லா வயதினருக்கும் பொருந்தும்.
===========================================
Sample 5
ஸ்ட்ரென்த்
ஸ்ட்ரென்த் என்பது, உடல் தனது தசைகளை பின்வரும் தாக்கத்தினால் (அதிகபட்ச) விசையுடன் சுருக்கும் திறன்.
1) ஸ்ட்ரக்சரல் / அனாடமிகல் / பயோ-மெகானிகல் காரணிகள் -> எந்திரம் எவ்வளவு பயன்திறன் கொண்டுள்ளது எனும் விஷயம்.
2) ஃபிசியலாஜிகல் / பயோ கெமிகல் காரணிகள் -> உள் அமைப்புகள் எனர்ஜி உருவாக்கும், பழுது பார்க்கும் மற்றும் பயிற்சி விளைவு ஏற்படுத்தும்.
3) சைகோ-நியூரல் / ஃபிசியலாஜிகல் காரணிகள் -> திறமைகள், மனப்பான்மை, வலி தாங்கும் சக்தி, தன்னம்பிக்கை.
4) புற / சுற்றுச்சூழல் காரணிகள் -> புவியீர்ப்பு, உயரம், உபகரணம், விளையாட்டுத் தரை போன்றவற்றில் இருந்து பயன்பெறுதல் (அவற்றை மிகைத்து ஆளுதல்).
உடல் ஆரோக்கியம் அல்லது விளையாட்டில், ஸ்ட்ரென்த் என்பது, ஓர் புற தடுப்புசக்திக்கு எதிராக தசை-எலும்பு பலத்தை பிரயோகிப்பதற்கான உடல் திறன்.
ஏனரோபிக் (ஸ்ட்ரென்த்) ஸ்/s ஏரோபிக் (என்டியூரன்ஸ்) என்ற பழைய வரையறைகளை ஒப்பிடும்போது, மாபெரும் வித்தியாசம் கொண்ட வரையறை: ஒவ்வொரு முனையிலும் "கன்டினுவம்" - ஸ்ட்ரென்த் என்டியூரன்ஸ்!
ஸ்ட்ரென்த் வளர்த்துக்கொள்வதற்கு வயது, பால் ஆகியவை ஒரு தடை அல்ல!
சிக்கலான - பரஸ்பர தொடர்புடைய காரணிகள். ஒற்றை வரையறை எதுவும் கிடையாது!
ஸ்ட்ரென்தை உங்களுக்கு சாதகமாக்கிப் பிரயோகிக்கலாம். ஒருங்கிணைந்த முறையில் இதைச் செய்யலாம்
- 8 தொழில்நுட்பங்கள்!
===========================================
Sample 6
சுவாசிப்பு உத்திகள்
வல்சல்வா மெனூவர் - அனுபவ முதிர்ச்சி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு மட்டும்; ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கோ சிறப்பு நிலைமை மக்களுக்கோ உகந்ததல்ல. வல்சல்வா ஃபினாமினனை தவிர்க்கிறது / சமாளிக்கிறது.
எக்ஸ்ப்லோசிவ் அசைவுகள் கூடிய கன ரக வெயிட் லிஃபிடிங், முதுகுத்தண்டு மீது பளு சுமத்துகிறது. I
இருதயம் மற்றும் நெஞ்சுக்கு O2 அளிக்கும் ரத்தக் குழாய்களில் இன்ட்ரா-அப்டாமினல் மற்றும் இன்ட்ரா-தொராசிக் பிரஷர் உருவாகும். இந்தக் குழாய்களின் இயக்கம் ஸ்தம்பித்து, இருதயத்துக்குச் செல்லும் O2 அளவு குறைந்துவிடலாம். ஆக, இத்தகையவருக்கு காயம், மயக்கம் அல்லது மரணம் கூட ஏற்படும் அபாயம் உண்டாகிறது. இதற்குப் பெயர் தான், வல்சல்வா ஃபினாமினன்.
நெகடிவ் ஃபேஸின் போது மூச்சை உள்ளிழுக்கவும். பின்னர், க்ளாட்டிஸை பயன்படுத்தி, அடிவயிறு மற்றும் விலா எலும்புக்கூடு தசைகள் சுருங்கும் ஒரே நேரத்தில் மூச்சை பிடித்து வைக்கவும். ROM ன் இறுதி 1/3 ன் போது, மூச்சை வெளிப்படுத்தவும். 8 வினாடிகளுக்கு மேலாக மூச்சை பிடித்துவைக்க வேண்டாம்.
இயல்பான சுவாசிப்பு - மூச்சை பிடித்துவைக்காத சுவாசிப்பு. ஆரம்பநிலையில் உள்ளவர்களுக்கும் சிறப்பு நிலைமையில் உள்ள மக்களுக்கும். எக்சன்ட்ரிக் ஃபேஸில் மூக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்; கான்சன்ட்ரிக் ஃபேஸில் வாய் வழியாக - "உதடுகளை குவித்துவைத்து"- மூச்சை வெளியேற்றவும்.
வாம் அப்
பொதுவானது - முழு உடலுக்கும். குறிப்பானது - உடனடியாக இயக்கக்கூடிய தசைகளுக்கு மட்டும்.
பலன்கள்: தசையின் கான்ட்ராக்ஷன் ரேட், தசைகளுக்குள் நிலவும் எலக்ட்ரிக் செயல்பாடு, லிமிட் ஸ்ட்ரென்த், கான்ட்ராக்ஷன் பராமரிக்கப்படும் கால அளவு, இணைப்புத் திசுவின் ஏற்புத் திறன், உறிஞ்சு சக்தி, RBC யில் இருந்து O2 பிரிவதால் ஏற்படும் தசையின் டெம்ப், நெர்வ் கன்டக்ஷன் வெலாசிடி, திறந்திருக்கும் ரத்த நுண்குழாய்களின் எண்ணிக்கை முதலியவற்றை அதிகரிக்கிறது. காயம், சோர்வுக்கான அபாயத்தை குறைக்கிறது.
சிறிய, எக்ஸ்ப்லோசிவ் விளையாட்டுகளுக்கு மிகப் பொருத்தமானது. என்டியூரன்ஸ் அல்லது தொடர்ச்சியாக நடக்கும் நிகழ்வுகளுக்கு பொருத்தமற்றது.
நேரடி வாம்-அப், விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே உரியது. 4 - 5 நிமிடங்கள் மறைமுகமான வாம்-அப்பும் சரி தான். எ.டு.ஸ்ட்ரெச்சிங், சைக்கிளிங் போன்றவை.
கூல் டவுன்
உயர் செறிவுள்ள ஏனரோபிக் செயல்பாட்டுக்கு முன், லேசான ஏரோபிக் செயல்பாடு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ரத்தத்திலும் தசையிலும் உள்ள லேக்டிக் அமிலத்தை நீக்குகிறது. DOMS குறைந்தபட்சமாக்கப்படுகிறது. RHR மற்றும் BP இயல்புநிலைக்கு கொண்டுவரப்படுகிறது. தசைகளுக்கான 80-85% கார்டியாக் அவுட்புட் குறைந்து, 15-20% என்ற ஓய்வு இயல்புநிலைக்கு வந்துவிடுகிறது. இதனால், உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் துவங்குகிறது. குமட்டல் தவிர்க்கப்படுகிறது.
===========================================
Sample 7
அடிப்படை அனாடமி & ஃபிசியாலஜி
அனாடமி - உடல் அமைப்பு குறித்த அறிவியல்.
ஃபிசியாலஜி - நமது உடல் இயங்கும் விதம் குறித்த அறிவியல்.
• 5 மட்டங்களில் உடல் கட்டமைக்கப்பட்டுள்ளது: ரசாயணங்கள் > செல்கள் > ஒன்றுசேர்ந்து திசுக்களை உருவாக்குகின்றன > உடல் அமைப்புகளில் திசுக்கள் கூட்டாகச் செயல்படுகின்றன > மனித உடல்.
• ரசாயண மட்டம்: அணுக்கள், மாலிக்யூல்கள். உடலின் 98% அளவு 6 தனிமங்களே உள்ளன - ஆக்சிஜன், கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், கேல்சியம் மற்றும் பாஸ்பேட்.
A - செல்கள்:
அணுக்கள், மாலிக்யூல்கள் ஆகியவை செல்களை - அடிபப்டை கட்டுமானப் பொருட்கள் - உருவாக்குகின்றன. அடிப்படை வாழ்வு.
• ஒவ்வொரு உடலிலும் பல்வேறு வகைகளில், வடிவங்களில், அளவுகளில் சுமார் 100 முதல் 300 ட்ரில்லியன் செல்கள் உள்ளன!
• எ.டு.ஸ்ட்ரியேடட் தசை செல்கள் பல இஞ்சுகள் நீளம் கொண்டது; சுருங்கும் திறணுடையது => தசை சுருக்கம். ஃபேட் செல்கள் சிறிதாகவும் உருண்டையாகவும் உள்ளன. அவை, பற்றார்க்குறை காலங்களில் எனர்ஜி வழங்குவதற்காக ஃபேட்டி அமிலங்களை சேமிக்கின்றன.
• சுய-விருத்தி திறன். உடல் உருவாக்கத்தின் காரணம்: பெண் முட்டை மற்றும் ஆண் விந்துவின் (பாலியல் செல்களின்) சேர்க்கை => ஸைகோட் - 100 ட்ரில்லியன் செல்களின் துவக்கப் புள்ளி!
• ஒவ்வொரு செல்லும் இரண்டு, இரண்டாக வகுத்துப் பெருகுகின்றன. இந்த நிகழ்முறை என்றென்றும் தொடர்கிறது. மொத்த எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட எண்ணை அடைந்ததும், செல்கள் வகுத்துப் பெருகி பழைய அல்லது இறந்த செல்களுக்கு பதிலீடு செய்கின்றன.
• செல் பாகங்கள் அல்லது ஆர்கனல்களில் அடங்கும் பொருட்கள்: ப்லாஸ்மா மெம்பிரேன், நியூக்லியஸ், ரைபோசோம்கள், என்டோப்லாஸ்மிக், ரெடிகுலம், கோல்ஜி அப்பாரடஸ். லைசோசோம், மைட்டோகான்ட்ரியா.
• ப்லாஸ்மா மெம்பிரேன்: புரோட்டீன்கள், பாஸ்போலிபிட் பை-லேயர்கள் (ஃபேட்டி அமிலங்கள், க்ளிசரால், பாஸ்பேட் மாலிக்யூல்கள்) ஆகியவற்றினால் ஆனவை. 3 கார்போஹைட்ரேடியான் க்ளிசரால் மாலிக்யூல்களுடன் ஒட்டியிருக்கும் ஃபேட்டி அமிலங்கள் > ட்ரைக்ளிசைரைடுகள். கொழுப்பு - வாழ்விற்கும் தசை திணிவு டேவிற்கும் என்டியூரன்ஸ் ஓட்டத்திற்கும் அத்தியாவசியமானது! அது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி கடத்துகிறது, நச்சுக்களை வெளியே தள்ளுகிறது. இன்சுலின் ஹார்மோன் - மெம்பிரேன் நெடுகிலும் குளுகோஸ் மற்றும் அமினோ அமிலங்களில்ன் இன்டேக்கை தூண்டுகிறது.
• நியூக்லியஸ்: கருத்த நிறத்தில் உள்ளது. செல்லின் மையப்பகுதியை கட்டுப்படுத்துகிறது. அதில் தான் மரபியல் வஸ்துக்கள் - DNA (டீ-ஆக்சி-ரைபோ-நியூக்லியிக் ஆசிட்) குடிகொண்டு இருக்கின்றன. இதன் நூலிழைகள் 46 குரோமோசோம்களை (23 ஜோடிகள்) அமைக்கின்றன. இவை தான் நமது தோற்றம் போன்றவற்றை முடிவுசெய்கின்றன. ஆண் விந்து மற்றும் பெண் முட்டையில் இருந்து தலா ஒரு ஜோடி வருகிறது. செல்களுக்குத் தேவையான வஸ்துக்களை நியூக்லியஸ் உற்பத்திசெய்கின்றது. இது RNA (ரைபோ நியூக்லியிக் ஆசிட்) எனும் தூதுவரின் உதவியால் நடைபெறுகிறது. சில அமினோ அமிலங்கள் இல்லாமல் போனால், புரோட்டீன் சங்கிலிகள் முழுமைபெறாது. எனவே, புரோட்டீன் உட்கொள்ளுதல் கட்டாயம் தேவை!
• கோல்ஜி அப்பாரடஸ்: அவை கார்போஹைட்ரேட் மாலிக்யூல்களை உருவாக்கி, பின்னர் அவற்றை புரோட்டீன்களுடன் சேர்த்து க்ளைகோபுரோட்டீன்களை அமைக்கின்றன. க்ளைகோபுரோட்டீன்கள் என்பவை என்ஸைம்கள், ஹார்மோன்கள், ஆன்டிபாடிகள், ஸ்ட்ரக்சரல் புரோட்டீன்கள் போன்றவையாக செயல்படுகின்றன.
• மைட்டோகான்ட்ரியா: எனர்ஜி உருவாக்குகிறது. ATP இங்கு தான் தங்கியுள்ளது. புரோட்டீன் சின்தஸிஸ் மற்றும் லிபிட் மெடபாலிஸம் இங்கு தான் நடைபெறுகிறது.
B - திசுக்கள்: செயல்பாடு மற்றும் அமைப்பின் அடிப்படை யூனிட்டுகள். (செல்கள் - வாழ்வின் அடிப்படை யூனிட்டுகள்.) ஒன்றாக பிணைக்கப்பட்ட பல செல்கள், ஒரு பொதுவான பணியை மேற்கொள்வதற்காக செயல்படுகின்றன. இவற்றின் வகைகள்: எபிதெலியல், கனக்டிவ், தசை, நெர்வஸ் (நரம்பு).
• எபிதெலியல்: உடலை மறைக்கும் மேல்படிமம் (சருமம்), இன்னர் கேவிட்டிகள், உறுப்புகள் போன்றவை. வெளிப்புறத்தில் பாதுகாப்பு அளிக்கக்கூடியது; உட்புறத்தில் - உறிஞ்சும் மற்றும் சுரக்கும் திசுக்களாக வேலைசெய்கின்றன - எ.டு.வயிற்று லைனிங்.
===========================================
English to Tamil: Insurance General field: Marketing Detailed field: Insurance
Source text - English Sample 1
• Immediate financial help due to unfortunate death
• Simple policy to understand with standard terms
• Very low annual premium
• Death benefit before maturity
===========================================
Sample 2
Amar Suraksha is ideal for farmers and the rural population. The key reason is that it is a savings cum insurance product.
It is a plan that is traditional and offers protection as well as savings for the future. Amar Suraksha is tailor-made to generate savings for a common family’s needs, such as a child’s education, wedding, or for building a house.
Is that so? Well, every man is worried about his present and future. Amar Suraksha protects your today and saves for you future. So that is very good!
Correct. With Amar Suraksha, all the premiums paid are returned to the policy holder if alive, on maturity or end of the term.
===========================================
Sample 3
...the village sarpanch who is already our customer, has a friend, Shyam. Shyam is 35 years old and has two children, both girls, 3 and 5 years old. He runs a kirana shop in his village. He makes good money every month and does seasonal farming of crops. He earns approximately Rs. 30,000 a month. His family maintenance costs him Rs 5000 and personal expenses are Rs 1000. He still saves Rs 500 daily. Recently he bought a tractor for his farm by taking a loan from a bank. I think he will be keen on taking Amar Suraksha.
===========================================
Sample 4
I also know that the policy holder gets 30 days time in case he is unable to pay his premium. And the sum assured remains fixed throughout the term.
That’s right. If the policy holder dies before maturity then the sum assured is paid to the nominee. However, no benefit will be paid to the policy holder on death directly or indirectly by suicide within one year of date of commencement of the policy.
...how are the benefit and the term linked?
...to clearly understand the relationship between these three terms—that is, policy term, annual premium, and benefits on maturity—you must have a look at this table. It shows the maturity amount decided for a particular term and its annual premium.
===========================================
Sample 5
Now, let me explain to you the formula to calculate the premium. As the sum assured is 50,000, the Annualised Premium Equivalent (APE) is equal to the premium rate multiplied by the sum assured divided by 1000. Based on the data, the APR is 1966.5.
You can also calculate the maturity benefit. It is the product of policy term (PT) multiplied by APE. Here, 5 which is the PT is multiplied by 1966.5. Thus maturity benefit is equal to 9832.
The policy will get a paid-up value only after three policy years which is calculated using a simple formula: Total number of premiums paid divided by total number of premiums payable multiplied by the sum assured plus bonus accrued till date of paid up.
===========================================
Sample 6
Amar Suraksha offers guaranteed returns. The five Rs are — Risk, Rider, Return, Rebates, and Relaxation. The Risk is sum assured range, minimum Rs. 50,000 and maximum Rs 100000. Although rider option is not available, but sum assured is enough to take care of any exigency. Return means return of premiums (without interest). You get a rebate in tax as per 80C and 10(10) D. The 5th R is relaxation which means that you can decide the level of protection you want.
===========================================
Sample 7
Jana Suraksha is typically a term insurance plan where only death benefit is payable and no maturity benefit. Hence, you cannot treat it as an ordinary savings plan. It is very useful for a contingency plan in case of death of the bread winner. Further it also pays double the sum assured on death due to an accident.
Jana Suraksha policy is eligible for people between the age group of 18 to 45. The two choices of policy term available are 5 and 10 years. The customer can choose any sum assured between Rs 20000 to Rs 50000 in multiples of 1000. Here, only sum assured is payable on death and the policy terminates
There is no maturity benefit associated with this policy. The policy aims to cater to the need of insurance for people below the poverty line or for people who are engaged in the social or un-organized sectors.
===========================================
Translation - Tamil Sample 1
• துரதிர்ஷ்டவசமாக மரணம் நிகழ்ந்துவிட்டால் உடனடி நிதி உதவி
• வழக்கமான விதிமுறைகளுடன் எளிதாக விளங்கத்தக்க பாலிசி
• மிகக் குறைவான வருடாந்திர ப்ரீமியம்
• மெச்சூரிட்டிக்கு முன்பாக டெத் பெனஃபிட்
===========================================
Sample 2
விவசாயிகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் அமர் சுரக்ஷா மிகப் பொருத்தமானது. ஏனெனில், அது சேமிப்பு கூடிய காப்பீட்டு திட்டம்.
இது பாரம்பரியமான ஒரு திட்டம். இதில் காப்பீடு மட்டுமின்றி வருங்காலத்திற்கான சேமிப்பும் உள்ளது. அமர் சுரக்ஷா குழந்தைகளின் திருமணம், கல்வி அல்லது வீடு கட்டுதல் போன்ற பொதுவான குடும்பத் தேவைகளுக்கு சேமிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
அப்படியா ! ஒவ்வொரு மனிதனும் தன் நிகழ்காலம் மற்றும் வருங்காலம் குறித்து கவலைப்படுகிறான். இந்நிலையில், அமர் சுரக்ஷா ஒருவரின் நிகழ்காலத்தை காக்கிறது, வருங்காலத்திற்கு சேமிக்கிறது. இது மிகவும் நல்ல விஷயமல்லவா!
சரியாகச் சொன்னாய். அமர் சுரக்ஷாவில் மெச்சூரிட்டி அடைந்த பின் அல்லது தவணையின் முடிவில் பாலிசிதாரர் உயிரோடு இருந்தால், செலுத்தப்பட்ட ப்ரீமியம்கள் அனைத்தும் அவரிடம் திருப்பியளிக்கப்படுகிறது.
===========================================
Sample 3
... ஏற்கனவே நமது வாடிக்கையாளராக இருக்கும் கிராமத் தலைவருக்கு ஷியாம் என்று ஒரு நண்பர் இருக்கிறார். ஷியாமுக்கு 35 வயது மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இருவருமே பெண்கள். ஒருவளுக்கு 3 வயது, மற்றவளுக்கு 5 வயது. அவர் தன் கிராமத்தில் மளிகை கடை நடத்துகிறார். அவர் மாதந்தோறும் நன்கு சம்பாதிக்கிறார் மற்றும் பருவ காலத்திற்கு ஏற்ப பயிர் விளைக்கிறார். அவர் ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.30000 சம்பாதிக்கிறார். அதில் குடும்பப் பராமரிப்பு செலவு ரூ.5000 மற்றும் சுய செலவு ரூ.1000. இருப்பினும், அவர் தினமும் ரூ.500 சேமிக்கிறார். சமீபத்தில், அவர் வங்கிக் கடன் பெற்று தன் வயலுக்காக ஒரு ட்ராக்டர் வாங்கினார். அவர் அமர் சுரக்ஷா எடுப்பதில் ஆர்வமாக இருப்பார் என நினைக்கிறேன்.
===========================================
Sample 4
ஆம். பாலிசிதாரர் ப்ரீமியம் செலுத்த இயலாத பட்சத்தில், அவருக்கு 30 நாட்கள் வரை அவகாசம் அளிக்கப்படுகிறது என்பதும் எனக்குத் தெரியும். மேலும், தவணை காலம் முழுவதும் உறுதித் தொகை ஒரே அளவாக இருக்கும்.
சரியாகச் சொன்னாய். மெச்சூரிட்டி அடைவதற்கு முன் பாலிசிதாரர் மரணித்துவிட்டால், நியமனதாரரிடம் உறுதித் தொகை செலுத்தப்படும். எனினும், பாலிசி தொடங்கிய தேதியிலிருந்து ஒரு வருட காலத்திற்குள்ளாக நேரடியாகவோ மறைமுகமாகவோ தற்கொலை செய்து பாலிசிதாரர் மரணித்துவிட்டால், எவ்வொரு பெனஃபிட்டும் அவருக்கு செலுத்தப்படாது.
... பெனஃபிட்டும் தவணையும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது?
...இந்த மூன்று பதங்களுக்கு இடையில் --- அதாவது பாலிசி தவணை, வருடாந்திர ப்ரீமியம் மற்றும் பெனஃபிட்ஸ் ஆன் மெச்சூரிட்டி --- உள்ள உறவை புரிந்துகொள்வதற்கு நீங்கள் இந்த அட்டவணை மீது பார்வை செலுத்தவேண்டும். அதில், ஒரு குறிப்பிட்ட தவணைக்கு முடிவுசெய்யப்பட்ட மெச்சூரிட்டி தொகை மற்றும் அதன் வருடாந்திர ப்ரீமியம் காட்டப்பட்டுள்ளன.
===========================================
Sample 5
இப்பொழுது, ப்ரீமியம் கணக்கிடும் ஃபார்முலாவை உங்களுக்கு விளக்குகிறேன். உறுதித் தொகை 50000 என்பதால், ப்ரீமியம் விகிதத்தை உறுதித் தொகையால் பெருக்கி 1000 த்தால் வகுத்தால் ஆனுவலைஸ்டு ப்ரீமியம் ஈக்விவேலன்டு (APE) கிடைக்கும். இதில் உள்ள தரவுகளின் படி, APR --- 1966.5
மேலும், மெச்சூரிட்டி பெனஃபிட்டையும் நீங்கள் கணிக்கிடலாம். அது பாலிசி தவணை (PT) மற்றும் APE யை பெருக்கல் செய்வது மூலம் கிடைக்கிறது. இங்கே PT = 5 என்பது, 1966.5 உடன் பெருக்கப்படுகிறது. ஆக, மெச்சூரிட்டி பெனஃபிட் தொகை, 9832.
மூன்று பாலிசி வருடங்களுக்கு பின்னரே இந்த பாலிசிக்கு பெய்ட்-அப் வேல்யூ கிடைக்கும். அதை கணக்கிடுவதற்கு ஒரு எளிய ஃபார்முலா பயன்படுத்தப்படுகிறது: செலுத்தப்பட்ட ப்ரீமியம்களின் மொத்த எண்ணிக்கையை, செலுத்தவேண்டிய ப்ரீமியம்களின் மொத்த எண்ணிக்கையால் வகுத்து, அதை உறுதித் தொகையால் பெருக்கி, பின்னர் பெய்ட்--அப் தேதி வரை சேர்ந்துள்ள போனஸை கூட்டவேண்டும்.
===========================================
Sample 6
அமர் சுரக்ஷா லாப உத்தரவாதம் அளிக்கிறது. அதிலுள்ள ஐந்து Rகள்: ரிஸ்கு, ரைடர், ரிட்டன் (லாபம்), ரிபேட்கள் (சலுகை) மற்றும் ரிலாக்சேஷன் (தளர்வு). ரிஸ்கு என்பது, உறுதித் தொகையின் அளவுகள் --- குறைந்தபட்சம் ரூ.50000 மற்றும் அதிகபட்சம் ரூ.100000. ரைடர் வசதி இதில் இல்லாதபோதிலும், எவ்வொரு அவசரச் சூழலை கவனித்துக்கொள்வதற்கும் உறுதித் தொகை போதுமானது. ரிட்டன் என்றால் ப்ரீமியம்களை (வட்டியின்றி) திருப்பியளித்தல். பாலிசி வாங்குவதால், 80C மற்றும் 10(10) D யின் கீழ் வரிச் சலுகை வசதி கிடைக்கிறது. ஐந்தாவது R, ரிலாக்சேஷன். உங்களுக்கு தேவையான பாதுகாப்பு மட்டத்தை உங்கள் விருப்பப்படி முடிவுசெய்துகொள்ளலாம்.
===========================================
Sample 7
ஜன சுரக்ஷா ஒருவகையான தவணை காப்பீட்டுத் திட்டம். அதில் டெத் பெனஃபிட் மட்டுமே வழங்கப்படும், மெச்சூரிட்டி பெனஃபிட் வழங்கப்படாது. எனவே, அதை ஒரு சாதாரண சேமிப்புத் திட்டமாக கருத இயலாது. வீட்டில் சம்பாதிக்கும் முக்கிய நபரின் மரணம் நிகழும் பட்சத்தில், இது மிகுந்த பயனளிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பத் தீர்வு திட்டம். மேலும், விபத்தில் மரணம் ஏற்படும் பட்சத்தில், உறுதித் தொகை இருமடங்கு வழங்கப்படுகிறது.
18 முதல் 45 வயது உடையவர்கள் ஜன சுரக்ஷா திட்டத்திற்கு தகுதிபெற்றுள்ளனர். பாலிசி தவணைக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன: 5 வருடங்கள் மற்றும் 10 வருடங்கள். மேலும், ரூ.20000 முதல் ரூ.500000 வரை, 1000 ங்களில் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் உறுதித் தொகை தெரிவுசெய்யலாம். இதில், மரணத்தை அடுத்து உறுதித் தொகை மட்டுமே வழங்கப்படும். அத்துடன் பாலிசி முற்றுப்பெற்றுவிடும்.
இந்த பாலிசியில் எவ்வித மெச்சூரிட்டி பெனஃபிட்டும் சம்பந்தப்பட்டிருப்பதில்லை. வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கும், சமூக அல்லது முறைசாரா துறைகளில் பணிபுரிபவர்களுக்கும் உரிய காப்பீட்டுத் தேவைகளை நிறைவுசெய்வதே இந்த பாலிசியின் நோக்கம்.
===========================================
Tamil to English: Language learning software - Cultural/Grammar notes General field: Other Detailed field: Linguistics
Source text - Tamil Cultural/Grammar Notes for Lang. learning software - samples
வணக்கம் (Vanakkam)
===========================================
நீங்கள் (Neengal)
===========================================
எனக்கு (enakku)
===========================================
Translation - English [Vanakkam] is the most common form of greeting. It can be used in place of "hello", "hi", "excuse me" etc. It is also used to show your respect to anyone. It can be used for both acquaintances and strangers.
===========================================
In Tamil, when addressing someone, the word "you" [Neengal] is omiited, except when explicit identification is required. Hence, instead of 'How are you?' [Neengkal eppadi erukkireergal?] we say "How are?" [eppadi erukkireergal?] Compare this with English imperatives, where 'you' is normally omitted. However, In Tamil, this is true with both imperatives ( [Vaanga] - 'come here') and interrogatives (['eppadi irukkureergal?] - 'how are?').
=========================================
[Thozhi] means friend (female). Most of the nouns (human form) in Tamil have separate masculine and feminine forms. Friend (male) is referred by the word [Thozan]. In addition, common (neuter) gender form is available too in many cases. [Thozar] can be used for any gender. Note the pattern [i] for feminine, [an] for masculine, [ar] for common.
===========================================
[Mosam] means '(It's) bad' (assertive). To make it interrogative, the long vowel [aa] is suffixed to make it [Mosamaa?] - '(Is it) bad?'.
===========================================
[kadai] refers to such English equivalents as 'shop', 'store','mall', 'market' etc. Just add a category name for various kind of shops. [Maligai kadai] - 'Grocery store'; [Marundu kadai] - 'Drug store'; [Tee kadai] - 'Tea shop'/ Coffee shop, [Thuni kadai] - 'Textile shop / Boutique' etc.
===========================================
[udan] denotes the English preposition, 'with'. [Nanban] - 'friend' [udan] - 'with' = [Nanbanudan] - 'with friend'. [Punnakai] - 'smile' [udan] - 'with' = [Punnakaiudan] - 'with smile'. Note that the preposition in English has become postposition in Tamil and is joined with the noun.
===========================================
[ingu] means 'here'. This is usually spoken as [ingey]. Similarly, [angu] - 'there' - is usually spoken as [angey].
===========================================
It can be seen that we can link two words without using "and". We can add [um] with each word to convey the meaning of "and". Here the two words "bottle" and "water" are combined by adding [um] to each word. "and" is not used.
===========================================
The suffix [kku]/ [ukku] added to a noun, gives its dative case. Hence, [Avan] - 'he' [ukku] = [Avanukku] - 'to him'. [Amma] - 'mom' [ukku] = [Ammavukku] - 'to mom'. [kku]/ [ukku] can be rendered in Englist as 'to' or 'for' depending on the context. A notable exception to this pattern is the word [Naan] - 'I'. Its dative case is not [Naanakku], but [Enakku] - 'to me' / 'for me'.
===========================================
English to Tamil: Legal General field: Law/Patents Detailed field: Law (general)
Source text - English Sample 1
The Local Authority may seek to amend this document further in light of any additional police disclosure received.
1. The children are XXXXXXX , date of birth 27th May 2005 and now 10 years old and XXXXXXX, date of birth 2nd June 2008 and now 2 years old. The children’s mother is XXXXXXX. The children were born during the marriage of their mother to XXXXXXX but DNA testing has confirmed that he is not the father of either child. From 2004 the mother was in a relationship with XXXXXXX. Whether or not he is the father of either or both of the children is currently being confirmed by DNA Testing.
2. The children were taken into police protection on 6th May 2010 and placed in foster care. They were made the subjects of Emergency Protection Orders on 7th May 2010 and interim Care Orders on 14th May 2010. The children have remained in foster care to date. As such the relevant date for determining the threshold criteria is the 6th May 2010, the date since which protective measures have been continually in place.
3. The Threshold Criteria, as set out in Section 31 of the Children Act 1989, are satisfied in respect of each of the children in that both were suffering, and likely to suffer, significant physical and emotional harm as a result of the care being given to them not being that which it would be reasonable to expect a parent to give.
===========================================
Sample 2
7. In light of all the above, summarised as the continued exposure to domestic violence and sexual abuse by their putative father from which their mother was unable to protect them despite the support of the Local Authority, a Housing support worker and the existence of a written agreement prohibiting him from contact with the children, the children have suffered and are likely to suffer significant harm. Accordingly the threshold criteria are satisfied.
XXXXX YYYYY
Counsel for the Local Authority
6th August 2010.
Translation - Tamil Sample 1
கூடுதல் போலீஸ் தகவல்கள் வெளிப்படுவதன் ஒளியில், உள்ளூர் ஆணையம் இந்த ஆவணத்தில் மேற்கொண்டு திருத்தம் ஏற்படுத்தலாம்.
1. குழந்தைகளின் பெயர்கள்: ஷாருண்யா ரவீந்தரன் - பிறப்பு தேதி: 27 மே 2005 மற்றும் தற்பொழுது 10 வயது சிறுமி; மற்றும் ஷகாண்யா ரவீந்தரன் - பிறப்பு தேதி: 2 ஜூன் 2008 மற்றும் தற்பொழுது 2 வயது சிறுமி. இந்தக் குழந்தைகள், தங்கள் தாய்க்கும் சுப்ரமணியம் ரவீந்தரனுக்கும் இடையிலான மணவாழ்வு காலத்தில் பிறந்தன. ஆனால், இரு குழந்தைகளுக்கும் அவர் தந்தை அல்ல என்பதை DNA டெஸ்டிங் உறுதிசெய்துள்ளது. தாய், 2004 முதல் குலேந்திரன் தங்கவேலு என்பவருடன் உறவு வைத்திருந்தாள். அவர் தான் இந்த குழந்தைகள் இருவருக்கும் அல்லது ஒருவருக்கு மட்டும் தந்தையா, இல்லையா என்பதை உறுதிசெய்யும் பணி தற்பொழுது DNA டெஸ்டிங் மூலம் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.
2. 6 மே 2010 அன்று குழந்தைகள் போலீஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டு, வளர்ப்புக் காப்பாளரின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 7 மே 2010 அன்று அவசர பாதுகாப்பு ஆணைகளுக்கும், 14 மே 2010 அன்று இடைக்கால பராமரிப்பு ஆணைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகள் இன்று வரை வளர்ப்புக் காப்பாளரின் பராமரிப்பிலேயே இருந்துவருகின்றனர். இந் நிலையில், குறைந்தபட்ச வரம்பு விதிகளை நிர்ணயிப்பதற்கு உரிய தேதி, 6 மே 2010. இந்த தேதியில் இருந்து தான், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
3. குழந்தைகள் சட்டம் 1989 பிரிவு 31-ல் விவரிக்கப்பட்டுள்ள படி, குறைந்தபட்ச வரம்பு நிபந்தனைகளாவன, இரண்டு குழந்தைகள் விஷயத்திலும் பொருந்தும். ஏனெனில், அவர்கள் இருவரும் துன்பத்திற்கு ஆளாகிக் கொண்டிருந்தனர். மேலும் வருங்காலத்திலும், அவர்களுக்கு கிடைக்கும் பராமரிப்பு, பெற்றோர் ஒருவரிடமிருந்து நியாயமாக எதிர்பார்க்கப்படும் பராமரிப்பாக இல்லாதிருக்கும் என்பதால், அவர்கள் கனிசமான உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான தீங்கிற்கு ஆளாக வாய்ப்புள்ளது.
===========================================
Sample 2
7. மேற்கண்ட உண்மைகளின் ஒளியில், இவ்வாறு சுருக்கமாகக் கூறலாம்: தங்கள் உத்தேசமான தந்தையின் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் சூழல் தொடர்ந்து நிலவுவதால்; தங்கள் தாயினால் இதிலிருந்து அவர்களை பாதுகாக்க இயலாமல் போனதால்; அதுவும், உள்ளூர் ஆணையம், ஒரு வீட்டு உதவிப் பணியாளர், குழந்தைகளை அவர் தொடர்புகொள்ளக் கூடாது என்ற எழுத்துப்பூர்வ உடன்பாடு ஆகியவற்றின் ஆதரவு இருந்தும் இது இயலாமல் போனதால், குழந்தைகள் இதுவரை துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இனிமேலும் கனிசமான தீங்கிற்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. ஆக, குறைந்தபட்ச வரம்பு நிபந்தனைகள் பூர்த்திபெற்றுள்ளன.
XXXXX YYYYY
உள்ளூர் ஆணையத்திற்கான வழக்கறிஞர்
6 ஆகஸ்ட் 2010
More
Less
Translation education
Master's degree - Annamalai University, Chidambaram, India
Experience
Years of experience: 20. Registered at ProZ.com: Mar 2010.